Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ள அவசியமில்லை

சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ள அவசியமில்லை

By: Nagaraj Sat, 19 Sept 2020 5:39:20 PM

சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ள அவசியமில்லை

அவசியமில்லை... நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ள அவசியமில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் சூர்யா நீட் தேர்வு குறித்து தெரிவித்த கருத்துக்கள் தமிழகம் முழுவதும் செம வைரலானது. இதில் நீதிமன்றம் குறித்தும் தெரிவித்து இருந்ததார். இதனால் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று நீதிபதி கடிதம் எழுதி இருந்தார்.

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி தலைமையிலான அமர்வு பிறப்பித்த உத்தரவில், கொரோனா பேரிடர் காலத்திலும் அர்பணிப்புடன் நீதிபதிகள் பணியாற்றியதாகவும், காணொலி மூலமாக 42,233 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

actor surya,not necessarily,contempt of court,case ,நடிகர் சூர்யா, அவசியமில்லை, நீதிமன்ற அவமதிப்பு, வழக்கு

நியாயமான விமர்சனங்களை நீதிமன்ற அவமதிப்பாக கருத முடியாது என்றாலும், கொரோனா காலத்தில் நீதிமன்ற செயல்பாடுகள் குறித்து முழுமையாக அறிந்து கொள்ளாமல் நடிகர் சூர்யா தெரிவித்த விமர்சனம் அவசியமில்லாத ஒன்று என உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

இதைத் தொடர்ந்து தன் மீதான புகார் தொடர்பான விசாரணையில் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை அவசியமில்லை என, சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய நேர்மையான தீர்ப்பை பணிவுடன் ஏற்றுக் கொள்வதாகக் நடிகர் சூர்யா குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்திய மக்களின் அரசியல் சாசன உரிமைகளை நீதித்துறை மட்டுமே உறுதி செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.

Tags :