Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் திரையரங்குகள் திறக்க வாய்ப்பு இல்லை; அமைச்சர் உறுதி

தமிழகத்தில் திரையரங்குகள் திறக்க வாய்ப்பு இல்லை; அமைச்சர் உறுதி

By: Nagaraj Wed, 22 July 2020 7:35:49 PM

தமிழகத்தில் திரையரங்குகள் திறக்க வாய்ப்பு இல்லை; அமைச்சர் உறுதி

தமிழகத்தில் தற்போது திரையரங்குகள் திறக்கப்படுவதற்கு வாய்ப்புகள் இல்லை என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். இதனால் திரையரங்கு உரிமையாளர்கள் வேதனையடைந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக விதிக்கப்பட்ட ஊரடங்கினால், மால்கள், திரையரங்குகள் போன்றவை திறக்கப்படவில்லை. ஊரடங்கின் போது சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்திருந்தாலும், திரையரங்குகளை திறப்பது பற்றி அரசும் இதுவரை எந்தவித முடிவும் எடுக்கவில்லை.

minister,kadampur raju,corona virus,theaters,opening ,
அமைச்சர், கடம்பூர் ராஜு, கொரோனா வைரஸ், திரையரங்குகள், திறப்பு

இந்த நிலையில், கோவில்பட்டி கயத்தாரில் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது :

தமிழகத்தில் தற்போதைக்கு திரையரங்குகளை திறக்க வாய்ப்பே இல்லை. வெளிநாடுகளில் திரையரங்குகள் திறக்கப்பட்டு விட்டன. ஆனால், ஒரு வரிசைக்கு இருவர் மட்டுமே அமர அனுமதிக்கப்படுகின்றனர். இது திரையரங்கு உரிமையாளர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும். திரையரங்குகள் திறப்பது குறித்து முதலமைச்சர் தான் முடிவெடுப்பார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். அமைச்சரின் இந்த அறிவிப்பு திரையரங்கு உரிமையாளர்களை வேதனையடைய வைத்துள்ளது.

Tags :