Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீடு எதுவும் நிலுவையில் இல்லை

மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீடு எதுவும் நிலுவையில் இல்லை

By: Nagaraj Mon, 27 Mar 2023 10:31:35 PM

மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீடு எதுவும் நிலுவையில் இல்லை

புதுடில்லி: நிலுவையில் இல்லை... மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீடு நிலுவையில் இல்லை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

2020-21ஆம் ஆண்டில் 31 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு 1,36,988 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்தார்.

gst,loss,state government, ,இழப்பீடு, ஜிஎஸ்டி, மாநில அரசுகளுக்கு

2022-23 நிதியாண்டில் அதன் எண்ணிக்கை ரூ.1,49,168 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகவும், மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீடு எதுவும் நிலுவையில் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை மத்திய அரசு வழங்கவில்லை என ஒரு சில மாநிலங்கள் குற்றம்சாட்டி வரும் நிலையில், அமைச்சர் நிர்மலா சீதாராமன் இவ்வாறு பதில் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|