Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் அரசு பேருந்துகள் தனியார் மயமாக்கல் என்ற பேச்சிற்கே இடம் இல்லை ..அமைச்சர் சிவசங்கர்

தமிழகத்தில் அரசு பேருந்துகள் தனியார் மயமாக்கல் என்ற பேச்சிற்கே இடம் இல்லை ..அமைச்சர் சிவசங்கர்

By: vaithegi Wed, 13 July 2022 6:34:19 PM

தமிழகத்தில் அரசு பேருந்துகள் தனியார் மயமாக்கல் என்ற பேச்சிற்கே இடம் இல்லை ..அமைச்சர் சிவசங்கர்

தமிழகம்: தமிழகத்தில் தற்போது இயங்கி கொண்டு வரும் அரசு பேருந்துகளின் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது இயங்கி வரும் பேருந்துகளில் ஏசி வசதி, தானியங்கி பேருந்து என பல வசதிகள் வந்துள்ளன.

மேலும் நல்ல வசதியுடன் ஏழை எளிய மக்களின் பயண சுமையை குறைக்க பல அரசு பேருந்துகள் இயங்கி கொண்டு வருகின்றன. ஆனால் தனியார் பேருந்துகளை ஒப்பிடுகையில் அரசு பேருந்துகளில் போதுமான வசதி எதுவும் இல்லை என மக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர்.

அரசு பேருந்துகளில் ஏசி வசதி வந்தாலும் அதை பராமரிப்பதில் பெர்ம் சிக்கல் இருக்கிறது. இதை சரி செய்ய அதிகம் பணம் செலவாகும். ஆனால் தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதால் அவர்களால் எளிதில் பராமரிக்கப்படுகிறது.

buses,private ,பேருந்துகள் ,தனியார்

அதனால் அரசு பேருந்துகளை தனியார் மயமாக்கல் செய்ய இருப்பதாக அரசிடம் ஆலோசனை வழங்கி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் பெட்ரோல் டீசல் விலை அதிகரிப்பு காரணமாகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் இது குறித்து அமைச்சர் சிவசங்கர் கூறுகையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்திற்கு புதிதாக 2000 பேருந்துகள் வாங்குவதற்கு பல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வந்ததால் கால தாமதம் ஏற்பட்டது.

ஆனால் தற்போது தீர்ப்பு வந்துள்ளது, எனவே விரைவில் இதற்கான டெண்டர் கோரப்பட்டு புதிய பேருந்துகள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். இந்நிலையில் தமிழகத்தில் அரசு பேருந்துகள் தனியார் மயமாக்கல் என்ற பேச்சிற்கே இடம் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

Tags :
|