Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இயல்பு நிலைக்கு திரும்பும் சாத்தியக்கூறுகள் இல்லை: டெட்ரோஸ் அதானோம் தகவல்

இயல்பு நிலைக்கு திரும்பும் சாத்தியக்கூறுகள் இல்லை: டெட்ரோஸ் அதானோம் தகவல்

By: Nagaraj Tue, 30 June 2020 7:30:42 PM

இயல்பு நிலைக்கு திரும்பும் சாத்தியக்கூறுகள் இல்லை: டெட்ரோஸ் அதானோம் தகவல்

உலக சுகாதார அமைப்பு தலைவர் வருத்தம்... கொரோனா பெருந்தொற்று முடிவிற்கான அருகில் கூட இன்னும் செல்லவில்லை என, உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்தவர், சீனாவில் 6 மாதங்களுக்கு முன்பு அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரசால், ஒரு கோடி பேருக்கு மேல் பாதிக்கப்பட்டு 5 லட்சத்திற்கும் மேலானோர் உயிரிழந்த மோசமான மைல்கல்லை எட்டியுள்ளோம் என குறிப்பிட்டார்.

இந்த சூழல் முடிவடைந்து இயல்பு நிலைக்கு திரும்பவே அனைவரும் விரும்புவதாகவும், ஆனால் அதற்கான சாத்தியக்கூறுகள் தற்போது வரை இல்லை எனவும் தெரிவித்தார்.

warning,world health,organization,corona,infection ,எச்சரிக்கை, உலக சுகாதார, அமைப்பு, கொரோனா, தொற்று

தொடர்ந்து, மக்கள் நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவதாகவும், கொரோனா வைரஸ் இன்னும் அதிக இடங்களுக்கு பரவ வாய்ப்புள்ளதாகவும் டெட்ரோஸ் எச்சரித்துள்ளார்.

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. உலகம் முழுவதும் ஒரு கோடிக்கும் அதிகமானோர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
|