Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் வெயில் குறைய வாய்ப்பு இல்லை... வானிலை மையம் தகவல்

தமிழகத்தில் வெயில் குறைய வாய்ப்பு இல்லை... வானிலை மையம் தகவல்

By: vaithegi Tue, 06 June 2023 4:29:29 PM

தமிழகத்தில் வெயில் குறைய வாய்ப்பு இல்லை... வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் தற்போதைக்கு வெயில் குறைய வாய்ப்பு இல்லை என்று இந்திய ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் அவர்கள் தெரிவித்து உள்ளார்.

இதனை அடுத்து இது தொடர்பாக நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு பேட்டியளித்து உள்ள அவர், தற்போது வறண்ட மேற்கு திசை காற்று வீசி வருவதால் வெப்பம் அதிகமாக இருப்பதாக கூறியுள்ளார்.

meteorological centre,vail ,வானிலை மையம்,வெயில்

கடந்த காலங்களிலும் ஜூன் மாதத்தில் 104 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பம் பதிவாகி இருந்ததாகவும்,அதிலும் குறிப்பாக 2019-ல் 14 நாட்கள் 104 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பம் பதிவானதாகவும் பாலச்சந்திரன் அவர்கள் கூறினார்.

இதையடுத்து 2 நாட்களுக்கு பின்னர் காற்றின் திசை மாறுபாடு காரணமாக வெப்பநிலை குறைய வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ள பாலச்சந்திரன் அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறினார்.

Tags :