Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வரலாறு காணாத பொருளாதார வளர்ச்சியும், வாய்ப்பும் உள்ளது

வரலாறு காணாத பொருளாதார வளர்ச்சியும், வாய்ப்பும் உள்ளது

By: Nagaraj Wed, 23 Nov 2022 6:32:44 PM

வரலாறு காணாத பொருளாதார வளர்ச்சியும், வாய்ப்பும் உள்ளது

குஜராத்: வரலாறு காணாத பொருளாதார வளர்ச்சியும், வாய்ப்பும் உள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், அதன் பொருளாதார வளர்ச்சியில் பல்வேறு மாற்றங்களை இந்தியா சந்திக்கும் என்று முகேஷ் அம்பானி தெரிவித்தார்.

குஜராத் மாநிலம் காந்தி நகரில் அமைந்துள்ள பண்டிட் தீன்தயாள் எரிசக்தி பல்கலைக்கழகத்தின் 10ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி பங்கேற்றார். பட்டமளிப்பு விழாவில் முகேஷ் அம்பானி பேசியதாவது:

இந்தியா வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. வரலாறு காணாத பொருளாதார வளர்ச்சியும், வாய்ப்பும் உள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், அதன் பொருளாதார வளர்ச்சியில் பல்வேறு மாற்றங்களை இந்தியா சந்திக்கும். பெரும் வளர்ச்சி அடையும்.

india,mukesh ambani,pandit deendayal energy , பட்டமளிப்பு விழா, பொருளாதாரம், முகேஷ் அம்பானி

3 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தைக் கொண்ட இந்தியா, 2047ல் 13 மடங்கு வளர்ச்சியடைந்து 40 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறும். உலகின் முதல் மூன்று பொருளாதார நாடுகளில் இந்தியா இடம்பிடித்துள்ளது. உயிர் ஆற்றல் புரட்சி, டிஜிட்டல் புரட்சி மற்றும் தூய்மையான எரிசக்தி புரட்சி ஆகியவை எதிர்காலத்தில் இந்தியாவின் அதிவேக வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும்.

இந்த மூன்று புரட்சிகளும் சேர்ந்து நமது அழகிய பூமியை காலநிலை நெருக்கடியிலிருந்து காப்பாற்ற உதவும். அமெரிக்கா, சீனா, ஜப்பான் மற்றும் ஜெர்மனிக்கு அடுத்தபடியாக உலகப் பொருளாதாரத்தில் இந்தியா ஆதிக்கம் செலுத்துகிறது. அவர் கூறியது இதுதான்.

Tags :
|