Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மகளிர் உரிமைத்தொகை ..இந்த மாதம் பணம் வழங்குவதில் சில மாற்றங்கள் இருக்கலாம்

மகளிர் உரிமைத்தொகை ..இந்த மாதம் பணம் வழங்குவதில் சில மாற்றங்கள் இருக்கலாம்

By: vaithegi Mon, 09 Oct 2023 12:10:00 PM

மகளிர் உரிமைத்தொகை  ..இந்த மாதம் பணம் வழங்குவதில் சில மாற்றங்கள் இருக்கலாம்

சென்னை: தமிழகத்தில் 1.06 கோடி பெண்களுக்கு செப்டம்பர் மாதம் மகளிர் உரிமைத்தொகையான ரூ.1000 வழங்கப்பட்டது. இந்த உரிமைத்தொகை பெற விண்ணப்பித்த 1.70 கோடி பெண்களில் 1.06 கோடி பெண்களுக்கு மட்டுமே இந்த உரிமைத்தொகை வழங்கப்பட்டு உள்ளது.

இதையடுத்து மீதம் உள்ளவர்கள் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் அவர்கள் மேல்முறையீடு செய்ய அரசு வாய்ப்பு வழங்கி கொண்டு இருக்கிறது. அதில் பலர் இத்திட்டத்தின் கீழ் மேல்முறையீடு செய்து உள்ளனர்.

changes,womens rights allowance,money ,மாற்றங்கள் ,மகளிர் உரிமைத்தொகை,பணம்


ஆனால் அவர்களில் அரசின் விதிமுறைகளான கணவர் அரசு வேலையில் இல்லாதவர்களும், ஆதார் கார்டு இணைக்கப்பட்ட வங்கி கணக்கு உள்ளதா என்பதை பார்த்தும், குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்கு மேல் இல்லாதவர்களும்,

மேலும் வருமான வரி செலுத்தாதவர்களுக்கும், முதியோர் ஓய்வூதியம் (OAP), விதவை ஓய்வூதியம், அமைப்புசாராத் தொழிலாளர் நலவாரிய ஓய்வூதியம் போன்ற சமூகப் பாதுகாப்புத் திட்ட ஓய்வூதியம் மற்றும் அரசிடம் இருந்து ஓய்வூதியம் பெறாதவர்களுக்கு மட்டுமே இம்மாதம் பணம் வரும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags :