Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தேசிய ஒற்றுமை ஆட்சியமைக்க பிரதமர் நெதன்யாகுவிற்கு அதிபர் ரூபன் அழைப்பு

தேசிய ஒற்றுமை ஆட்சியமைக்க பிரதமர் நெதன்யாகுவிற்கு அதிபர் ரூபன் அழைப்பு

By: Nagaraj Sat, 09 May 2020 08:38:12 AM

தேசிய ஒற்றுமை ஆட்சியமைக்க பிரதமர் நெதன்யாகுவிற்கு அதிபர் ரூபன் அழைப்பு

தேசிய ஒற்றுமையை அமைக்க வாருங்கள் என்று பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு இஸ்ரேல் அதிபர் ரூபன் ரிவ்லின் அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து அதிபர் ரிவ்லின் தெரிவித்துள்ளதாவது:

நாம் எதிர்கொண்டுள்ள மிகப்பெரிய சவால்களை சமாளித்து இஸ்ரேலில் புதிய அரசு அமையும் என நம்புகிறேன். எனவே தேசிய ஒற்றுமை அமைய வேண்டும் என்பதற்காக நெதன்யாகுவிற்கு அழைப்பு விடுத்துள்ளேன். கடந்த ஆண்டு ஏப்.,லில் இஸ்ரேலில் தேர்தல் நடந்தது.

israel,state organization,prime minister netanyahu,call and referendum ,இஸ்ரேல், அரசு அமைப்பு, பிரதமர் நெதன்யாகு, அழைப்பு, வாக்கெடுப்பு

ஆயினும் ஆட்சி அமைவதற்கான பெரும்பான்மை இல்லை. தொடர்ந்து, செப்., 2 வது முறையாக மீண்டும் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலிலும் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் இணைந்து (கூட்டணி) தேசிய ஒற்றுமை அரசு அமைக்கும் முறை மேற்கொள்ளப்பட்டது.

ஆயினும் அந்த அரசில் தான் பிரதமராக இருக்க வேண்டும் என நெதன்யாகுவும். அவரை தொடர்ந்து, முக்கிய எதிர்கட்சியான புளு அண்ட் ஒயிட் கட்சியின் தலைவர் பெஞ்சமின் காண்ட்ஸூம் பிடிவாதமாக இருந்தனர். இதனால் இந்த பேச்சுவார்த்தையில் முறிவு தொடர்ந்தது. மேலும் 3 வது முறையம் தேர்தல் நடந்தது. அதிலும் பெரும்பான்மை யாருக்கும் கிடைக்கவில்லை.

israel,state organization,prime minister netanyahu,call and referendum ,இஸ்ரேல், அரசு அமைப்பு, பிரதமர் நெதன்யாகு, அழைப்பு, வாக்கெடுப்பு

இதனால் தேசிய ஒற்றுமை அமைய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, மசோதா மீது நேற்று முன்தினம் வாக்கெடுப்பு நடந்தது. இதில் ஆதரவாக 71 பேரும், எதிராக 37 பேரும் வாக்களித்தனர். அதையடுத்து அந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

அதை தொடர்ந்து தேசிய ஒற்றுமை அரசை அமைப்பதற்கு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு அதிபர் அழைப்பு விடுத்துள்ளார்.

Tags :
|