Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கழிவு நீர் வாய்க்களில் மிதந்து வந்த ரூபாய் நோட்டுக்களால் பரபரப்பு

கழிவு நீர் வாய்க்களில் மிதந்து வந்த ரூபாய் நோட்டுக்களால் பரபரப்பு

By: Nagaraj Mon, 08 May 2023 11:34:51 PM

கழிவு நீர் வாய்க்களில் மிதந்து வந்த ரூபாய் நோட்டுக்களால் பரபரப்பு

பீகார்: கழிவு நீர் வாய்க்களில் கிடந்த ரூபாய் நோட்டுக்கள்... பீகார் மாநிலம் கழிவுநீர் வாய்க்கால் ஒன்றில் கிடந்த ரூ.2000, ரூ.500 நோட்டுகளை மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து அள்ளிச் சென்ற காட்சி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
பீகார் தலைநகர் பாட்னாவில் இருந்து 150 கி.மீ தொலைவில் உள்ள ரோஹ்தாஸ் மாவட்டத்தின் மொராபாத் கிராமத்தில் உள்ள கழிவுநீர் வாய்க்கால் ஒன்றில் ரூ.200, ரூ.500 நோட்டுகள் மிதந்ததை கண்டு கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

கழிவுநீர் வாய்க்காலில் பணம் கொட்டிக்கிடக்கும் தகவல் அந்த கிராம மக்களிடையே தீயாக பரவியது. இதையடுத்து, கழிவுநீர் வாய்க்காலில் கட்டுக்கட்டாக கிடந்த ரூபாய் நோட்டுகளை எடுப்பதற்கு ஏராளமானோர் அங்கு குவிந்தனர். கூட்டம் கூட்டமாக வந்த மக்கள் கழிவுநீர் வாய்க்காலில் இறங்கி ரூ.2000, ரூ.500, ரூ.100, ரூ.10 என பல்வேறு மதிப்புள்ள நோட்டுகளை அள்ளிச் சென்றனர்.

warning,counterfeit notes,sewage drains,currency notes ,எச்சரிக்கை, கள்ளநோட்டுகள், கழிவு நீர் வாய்க்கால், ரூபாய் நோட்டுகள்

இது குறித்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கழிவுநீர் வாய்க்காலில் வீசியவர்கள் யார் என்பது குறித்து மாவட்ட நிர்வாகம் விசாரணை நடத்தி வருகிறது. இந்த சம்பவம் சந்தையில் கள்ள நோட்டுகள் அதிகரித்துள்ளது குறித்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கள்ள நோட்டுகள் ஒரு பெரிய பிரச்னையாக உள்ளது, சமீப காலமாக கள்ள நோட்டுகள் அதிகரித்து வருவதாக இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) தெரிவித்துள்ளது.

ரூபாய் நோட்டுகளை கையாளும் போது மிகுந்த எச்சரிக்கையாகவும், சந்தேகத்திற்கு இடமான செயல்கள் ஏதேனும் நடைபெற்றால் அதுகுறித்து அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி பலமுறை எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :