Advertisement

சாத்தான்குளம் பகுதியில் பலத்த மழை பெய்தது

By: vaithegi Wed, 31 Aug 2022 10:32:10 PM

சாத்தான்குளம் பகுதியில் பலத்த மழை பெய்தது

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் களக்காடு, நாங்குநேரி, மூலக்கரைப்பட்டி, சேரன்மகாதேவி ஆகிய பகுதிகளில் நேற்று சாரல் மழை விட்டுவிட்டு பெய்தது. பாபநாசம், சேர்வலாறு அணை பகுதிகளிலும் லேசான மழை பெய்தது.

இதை அடுத்து அதிகபட்சமாக நாங்குநேரியில் 9 மில்லிமீட்டரும், சேர்வலாறில் 6 மில்லிமீட்டரும் மழை பெய்தது. ராதாபுரம், கன்னடியன், பாளை உள்ளிட்ட இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. தென்காசி மாவட்டத்தில் தென்காசி, செங்கோட்டை, ஆய்குடி, சிவகிரி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

heavy rain,satankulam ,பலத்த மழை ,சாத்தான்குளம்


மேலும் செங்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான பண்பொழி, பிரானூர் பார்டர் உள்ளிட்ட பகுதிகளில் விடிய விடிய மழை பெய்தது. பிரானூர் பார்டரில் பெய்த மழையால் மரக்கிளை முறிந்து விழுந்ததில் அதன் கீழ் இருந்த மின்கம்பம் முறிந்து விழுந்தது. உடனடியாக மின் வாரிய அதிகாரிகள் வந்து சரி செய்தனர். அதிகபட்சமாக ஆய்க்குடியில் 11 மில்லிமீட்டர் மழை பெய்தது. அணை பகுதிகளை பொறுத்தவரை கடனா, ராமநதி மற்றும் அடவிநயினார் கோவில் அணை நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக ராமநதி அணையில் 30 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.

இதனை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் நேற்று மழை பெய்தது. சாத்தான்குளம் பகுதியில் பலத்த மழை பெய்தது. அங்கு 7.5 சென்டிமீட்டர் மழை கொட்டித்தீர்த்தது. ஓட்டப்பிடாரம், கயத்தாறு, மணியாச்சி, ஸ்ரீவைகுண்டம், கீழ அரசடி, விளாத்திகுளம், எட்டயபுரம் உள்ளிட்ட இடங்களிலும் பலத்த மழை பெய்துள்ளது.

Tags :