Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உள்ளூராட்சி சபைத் தேர்தலால் ஆட்சி மாற்றம் ஏற்படாது... அமைச்சர் ஜீவன் தொண்டமான் சொல்கிறார்

உள்ளூராட்சி சபைத் தேர்தலால் ஆட்சி மாற்றம் ஏற்படாது... அமைச்சர் ஜீவன் தொண்டமான் சொல்கிறார்

By: Nagaraj Wed, 25 Jan 2023 10:13:49 PM

உள்ளூராட்சி சபைத் தேர்தலால் ஆட்சி மாற்றம் ஏற்படாது... அமைச்சர் ஜீவன் தொண்டமான் சொல்கிறார்

கொழும்பு: ஆட்சிமாற்றம் ஏற்படப்போவதில்லை... உள்ளூராட்சி சபைத்தேர்தலால் நாட்டில் ஆட்சிமாற்றம் ஏற்படப்போவதில்லை. எனவே, தற்போதைய பொருளாதார நெருக்கடியில் நிதியை மக்கள் நலன்களுக்காகவே பயன்படுத்த வேண்டும் என்று இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

உள்ளூராட்சிசபைத் தேர்தலில் போட்டியிடவுள்ள அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களின் பொதுச்செயலாளர்களுக்கும், தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடலொன்று தேர்தல் ஆணைக்குழுவில் நடைபெற்றது. இந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் பொதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags :