Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கோவை மாவட்டத்தில் நாளை (செப் 23) மின் விநியோயகம் இருக்காது

கோவை மாவட்டத்தில் நாளை (செப் 23) மின் விநியோயகம் இருக்காது

By: vaithegi Thu, 22 Sept 2022 3:08:13 PM

கோவை மாவட்டத்தில் நாளை (செப் 23) மின் விநியோயகம் இருக்காது

கோவை : அரசு தடையில்லா மின்சாரம் வழங்க பல ஏற்பாடுகளை செய்து வருகிறது. அதற்காக குறிப்பிட்ட சில துணைமின் நிலையங்களில் மின்சார பராமரிப்பு பணிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதனால் அந்த பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

அதன் படி கோவை மாவட்டம் விளாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை (செப். 23) மின்சார பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.அப்போது மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கிறது.

power distribution,coimbatore ,மின் விநியோயகம் ,கோவை

இதை அடுத்து அதனால் அந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் செய்யப்படும் பகுதிகளின் விவரங்கள் வெளியாகி இருக்கிறது.எனவே அதன்படி கை கோளம்பாளையம், வள்ளியம்பாளையம், பாலாஜி நகா், காளப்பட்டி , வீரியம்பாளையம் ஆகிய பகுதிகளும்

மேலும் சேரன் மாநகா், நேரு நகா், ஜீவா நகா், விளாங்குறிச்சி , தண்ணீா் பந்தல், லட்சுட் மி நகா், ஷாா்ப் நகா், மகேஷ்வரி நகா், முருகன் நகா், பீளமேடு இன்டஸ்ட்ரி யல் எஸ்டேட், குமுதம் நகா், செங்காளியப்பன் நகா் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 4 மணி வரை மின் விநியோகம் தடை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பை மின் நிர்வாக பொறுப்பாளர் அருள்செல்வி வெளியிட்டுள்ளார்.

Tags :