Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை (ஆகஸ்ட் 6) மின் விநியோகம் இருக்காது

திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை (ஆகஸ்ட் 6) மின் விநியோகம் இருக்காது

By: vaithegi Fri, 05 Aug 2022 2:36:28 PM

திண்டுக்கல் மாவட்டத்தில்  நாளை (ஆகஸ்ட் 6) மின் விநியோகம் இருக்காது

திண்டுக்கல் : இன்றைய கால கட்டத்தில் மின்சாரம் இல்லாமல் எந்த ஒரு துறையும் இயங்க முடியாத நிலை நிலவி கொண்டு வருகிறது. அந்த அளவுக்கு மின்சாரம் மக்களின் அன்றாட தேவைகளில் மிக இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே பல இடங்களில் மின்தடை தொடர்ந்து ஏற்படுவதாக புகார்கள் எழுந்து வருகின்றன.

இதை கருத்தில் கொண்டு மத்திய, மாநில அரசுகள் மின் உற்பத்தியை அதிகரிக்க பல புதிய திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. அதற்கேற்றவாறு மக்களும் அரசின் முயற்சிக்கு முழு ஒத்துழைப்பு தந்து மின்சாரத்தை சேமிக்க வேண்டும்.தமிழகத்தில் மக்களுக்கு தடையில்லாத மின்சார விநியோகம் செய்வதற்கு தமிழக மின்சார வாரியம் முழு முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் மாதந்தோறும் துணை மின் நிலையங்களை பராமரித்து அதன் மூலம் மக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கி கொண்டு வருகிறது.

there will be no power supply,dindigul ,மின் விநியோகம் இருக்காது ,திண்டுக்கல்

மேலும் இந்த பராமரிப்பு பணிகளின் போது அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டும். அவ்வாறு மின்தடை செய்யப்படும் பகுதிளில் மின் வயர்கள் சீரமைப்பு, மின் கம்பிகள் மாற்றுதல், மின் விநியோகத்திற்கு தடையாக இருக்கும் மரங்கள் அகற்றும் ஆகிய பணிகள் நடைபெறுவதால் பொது மக்கள் மற்றும் மின் ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு மின்தடை செய்யப்படுகிறது.

அதன்படி திண்டுக்கல் மாவட்டம் பழனி பாலசமுத்திரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் ஆகஸ்ட் 6 (சனிக்கிழமை) துணை மின் நிலைய பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் பழனி துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் பழனி நகர், பாலசமுத்திரம், நெய்க்காரப்பட்டி, ஆயக்குடி, மற்றும் சின்னக்கலையம்புத்தூர் போன்ற பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை செய்யப்படும் என பழனி மின்வாரிய உதவி செயற்பொறியாளர் பிரகாஷ்பாபு அவர்கள் தெரிவித்துள்ளார்.

Tags :