Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ராணி பேட்டை மாவட்டத்தில் ஆகஸ்ட் 11ம் தேதி மின்விநியோகம் இருக்காது

ராணி பேட்டை மாவட்டத்தில் ஆகஸ்ட் 11ம் தேதி மின்விநியோகம் இருக்காது

By: vaithegi Wed, 10 Aug 2022 8:39:48 PM

ராணி பேட்டை மாவட்டத்தில் ஆகஸ்ட் 11ம் தேதி மின்விநியோகம் இருக்காது

ராணி பேட்டை: தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள துணை மின் நிலையங்களில் மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று கொண்டு வருகிறது. இந்த மின் பராமரிப்பு பணிகளின் போது சாலைகளில் மின் விநியோகத்திற்கு தடையாக உள்ள மர கிளைகள் வெட்டப்பட்டு மின் பாதை சரி செய்யப்படுகிறது.

மேலும் மின் கம்பங்களில் பழுதடைந்த மின் கருவிகள் மாற்றப்படுகிறது. மின்கம்பங்களில் உள்ள மின் கம்பிகள், வயர்கள் மாற்றுதல், மின் இணைப்புகளை சரி பார்த்தல் போன்ற முக்கிய பணிகள் நடைபெறுகிறது. இப்பராமரிப்பு பணிகள் மூலம் மின் பயனாளர்களுக்கு பாதுகாப்பான மின்சாரம் உறுதி செய்யப்படுகிறது.

இதனை அடுத்து மின் பராமரிப்பு பணியின் போது மின் ஊழியர்களின் பாதுகாப்பிற்காகவும், மின் பயனர்கள் பாதுகாப்பிற்காகவும் பணிகள் முடிவடையும் வரை மின் தடை செய்யப்பட்டு வருகிறது. இந்த மின்தடை குறித்து அந்தந்த பகுதி செயற்பொறியாளர் முன்கூட்டியே மக்களுக்கு அறிவிப்பு செய்கின்றனர்.

power supply,rani pettah ,மின்விநியோகம் ,ராணி பேட்டை

அந்த வகையில் இரானி பேட்டை மாவட்டம் உள்ள அன்வர்திகான் பேட்டை பகுதி துணை மின் நிலையத்தில் நாளை ( 10.08.2022 ) மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

அதனால் சாலை, மின்னல், நரசிங்கபுரம், அன்வர்திகான்பேட்டை, குன்னத்தூா், கூடலூா், குருவராஜப்பேட்டை, பாராஞ்சி, வேடல், அல்ட்ராடெக் சிமெண்ட் தொழிற்சாலை உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.

Tags :