Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஸ்ரீவில்லிபுத்தூரில் நாளை (வியாழக்கிழமை) மின்விநியோகம் இருக்காது

ஸ்ரீவில்லிபுத்தூரில் நாளை (வியாழக்கிழமை) மின்விநியோகம் இருக்காது

By: vaithegi Wed, 03 Aug 2022 12:44:20 PM

ஸ்ரீவில்லிபுத்தூரில்  நாளை (வியாழக்கிழமை) மின்விநியோகம் இருக்காது

ஸ்ரீவில்லிபுத்தூர்: தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே பல இடங்களில் மின்தடை ஏற்படுகிறது என்று புகார்கள் எழுந்து கொண்டு வருகின்றன. இதற்கு நாட்டில் மின் உற்பத்தி குறைய தொடங்கியதே காரணம் என்று ஒரு சில வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனை சரி செய்யும் வகையில் தமிழக மின்சார வாரியம் மத்திய அரசுடன் பல மின் ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது.

மேலும் இந்தியாவில் பல வகைகளில் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது சூரிய ஒளியின் மூலம் மின் உற்பத்தி செய்வது உயர்ந்து வருகிறது. விவசாயத்திலும் இந்த வகை மின் உற்பத்தி பெரிதும் பயன்படுகிறது.இதை அடுத்து தமிழகத்தில் மக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என்று தற்போதைய அரசானது மிக தீவிரமாக முயற்சித்து வருகிறது.

electricity distribution,srivilliputhur,power outage ,மின்விநியோகம் ,ஸ்ரீவில்லிபுத்தூர்,மின்தடை

அதுமட்டுமின்றி மாதந்தோறும் மின் கணக்கீடு திட்டத்தையும் விரைவில் செயல்படுத்த உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள துணை மின் நிலையங்கள் மூலம் அதை சுற்றியுள்ள பகுதிகளுக்கு மின்சாரம் விநியோகம் செய்யப்படுகிறது. மேலும் இந்த துணை மின் நிலையங்களை சரியாக பராமரிப்பதன் மூலம் மக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க முடியும். இதை கருத்தில் கொண்டு மாவட்ட வாரியாக மாதந்தோறும் பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன.

அதன் படி விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் நாளை (வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் காரணமாக மின்விநியோகம் தடை செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஸ்ரீவில்லிபுத்தூர் சித்தாலம்பத்தூர், இந்திரா நகர், காந்தி ரோடு காலனி, மம்சாபுரம், புதுப்பட்டி, செண்பகத்தோப்பு, காந்திநகர் இடையன்குளம், வன்னியம்பட்டி, வைத்தியலிங்கபுரம், வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, கரிசல்குளம், லட்சுமிபுரம், படிக்காசு, வைத்தான்புரம் போன்ற பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின் செயற்பொறியாளர் சின்னத்துரை அவர்கள் தெரிவித்துள்ளார்.

Tags :