Advertisement

தேனி மாவட்டத்தில் நாளை மின்விநியோகம் இருக்காது

By: vaithegi Sun, 11 June 2023 4:31:04 PM

தேனி மாவட்டத்தில் நாளை மின்விநியோகம் இருக்காது

தேனி : தேனி மாவட்டத்தில் உள்ள வடுகப்பட்டி துணை மின் நிலையங்களில் நாளை பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் எந்தெந்த பகுதிகளுக்கு மின் விநியோகம்தடை என்கிற அறிவிப்பை மின்வாரியம் தற்போது வெளியீடு ...

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் மாதந்தோறும் துணை மின் நிலையங்களில் ஏதேனும் பாதிப்பு உள்ளதா என்று சரிபார்க்கப்படுகிறது. மேலும், தற்போது தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்து வருவதனால் ஒரு சில பகுதிகளில் மின் கசிவு, மின்வெட்டு போன்ற பாதிப்புகள் ஏற்படுவதாக பொதுமக்கள் புகாரளித்து வருகின்றனர். இந்த நிலையில், ஒவ்வொரு மாவட்டங்களிலும் உள்ள துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் செய்யப்பட்டு வருகிறது.

power distribution,theni ,மின்விநியோகம் ,தேனி

அந்த வகையில் தேனி மாவட்டத்தில் உள்ள வடுகப்பட்டி துணை மின் நிலையங்களில் நாளை பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு மின் விநியோகம்தடை அறிவிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மின்வாரியம் தாராபுரம் கோட்ட சொற்பொழிவாளர் வ. பாலன் அவர்கள் அறிவித்துள்ளார்.

அதாவது, நாளை வடுகப்பட்டி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் வடுகபட்டி, குமாரபாளையம், மூக்குதரித்தான்பாளையம், சுள்ளி பெருக்கலாம்பாளையம், சம்மங்கரை, வண்ணாபட்டி, பட்டுத் துறை, வரப்பட்டி, நீலாங்காளிவலசு மற்றும் பி.ராமபட்டினம் ஆகிய பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் நிறுத்தம் என மின்வாரியத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags :