Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் நடைபெற்று வருவதால் நாளை மின்தடை

தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் நடைபெற்று வருவதால் நாளை மின்தடை

By: vaithegi Tue, 09 Aug 2022 4:30:35 PM

தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் நடைபெற்று வருவதால் நாளை மின்தடை

தூத்துக்குடி : மின்சாரம் என்பது அன்றாட வாழ்க்கையில் மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகும். இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளை விட மக்கள் தொகை உயர்ந்து கொண்டே வருகிறது. இதனால் மின் தேவைகளும் உயர்ந்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு மத்திய, மாநில அரசுகள் மின் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் பல நாடுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருகிறது.

இருப்பினும் மக்கள் அனைவரும் மின்சாரத்தை சிக்கனத்துடன் பயன்படுத்த வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் தொழில் வளர்ச்சி உயர்ந்து வருவதால் அதற்காக அதிக அளவு மின்சாரம் உபயோகப்படுத்தப்படுகிறது. இதை தவிர விவசாயத்திலும் மின்சாரம் முக்கிய பங்கு வகிக்கிறது.

power outage,thoothukudi ,மின்தடை,தூத்துக்குடி

தமிழகத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் பல்வேறு மாநகராட்சிகள் தரம் உயர்த்தப்பட்டு வருகின்றன. மேலும் இதற்கான நிதி ஒதுக்கப்பட்டு முதற்கட்ட பணிகள் நடைபெற்று கொண்டு வருகிறது. அதன்படி தூத்துக்குடி மாவட்டம் ஸ்மார்ட் சிட்டி பணிகள் நடைபெற்று கொண்டு வருகின்றன.

எனவே இதன் காரணமாக மின்மாற்றி கட்டமைப்பு மாற்றி அமைக்கும் பணி நடைபெறுவதால் நாளை (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை டூவிபுரம் 3ஆவது தெரு முதல் 6 வது தெரு வரை மின்சார தடை செய்யப்படுவதாக தூத்துக்குடி நகர்ப்புற மின் வாரிய செயற்பொறியாளர் ராம்குமார் அவர்கள் அறிவித்துள்ளார்.

Tags :