Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்த நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று படுகிறார்கள்

இந்த நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று படுகிறார்கள்

By: vaithegi Sun, 14 May 2023 4:20:28 PM

இந்த நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று படுகிறார்கள்

சென்னை: வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் : மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகள்: 14.05.2023: சூறாவளிக்காற்றின் வேகம் மணிக்கு 110 முதல் 120 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 130 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மாலை வரை காற்றின் வேகம் படிப்படியாக குறைந்து மணிக்கு 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 100 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதன்பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறையக்கூடும்.

மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகள்: 14.05.2023: மாலை வரை குறாவளிக்காற்றின் வேகம் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.வட கிழக்கு வங்கக்கடல் பகுதிகள்: 14.05.2023: கறாவளிக்காற்றின் வேகம் மணிக்கு 200 முதல் 210 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 230 கிலோ மீட்டர் வேகத்திலும் நண்பகல் வரை வீசக்கூடும். அதன்பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறைந்து மணிக்கு 180 முதல் 190 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 210 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதன்பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறையக்கூடும்.

fishermen,meteorological centre ,மீனவர்கள் ,வானிலை மையம்

மேலும் வட மேற்கு வங்கக்கடல் பகுதிகள்: 14.05.2023: கறாவளிக்காற்றின் வேகம் மணிக்கு 60 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 80 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதன்பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறையக்கூடும்.
எனவே மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று படுகிறார்கள். ஆழ் கடலிலுள்ள மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்த படுகிறார்கள்.

Tags :