Advertisement

இந்த மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும்

By: vaithegi Wed, 01 Feb 2023 09:40:26 AM

இந்த மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும்

சென்னை: கனமழை பெய்யக்கூடும் ..... தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனை அடுத்து இது பற்றி வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது ,

தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் இன்று கனமழை காரணமாக மஞ்சள் எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களிலும்

heavy rain,districts ,கனமழை ,மாவட்டங்கள்

இதனை அடுத்து ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் போன்ற மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

மேலும், தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகள், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Tags :