Advertisement

இந்த மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும்

By: vaithegi Fri, 03 Feb 2023 10:54:39 AM

இந்த மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும்

சென்னை: வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று அதிகாலை இலங்கை - திரிகோணமலைக்கும், மட்டக்களப்பிற்கும் இடையே கரையை கடந்தது. இது மேலும் தென்மேற்கு திசையில் நகர்ந்து குமரிக்கடல் மற்றும் அதை ஓட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளில் இன்று காலை நிலவக்கூடும்.

எனவே இதன் காரணமாக இன்று தென்தமிழக மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வடதமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.

rainfall,chennai,north east districts,puducherry ,கனமழை ,சென்னை,வடதமிழக மாவட்டங்கள், புதுச்சேரி

இதையடுத்து கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.நாளை தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான / மிதமான மழை பெய்யக்கூடும்.

மேலும் அத்துடன் இன்று தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் கறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என வானிலை மையயம் தெரிவித்துள்ளது.

Tags :