Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும்

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும்

By: vaithegi Sun, 23 Apr 2023 09:51:17 AM

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும்

சென்னை:இன்று 15 மாவட்டங்களில் கனமழை .... சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: தமிழகப் பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழ் அடுக்குகளில் காற்று சுழற்சி நிலவுகிறது.

எனவே இதன் காரணமாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

heavy rain,tamil nadu,puducherry,karaikal ,கனமழை ,தமிழகம், புதுச்சேரி, காரைக்கால்

அதைபோன்று நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, தென்காசி, சேலம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய 15 மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என அறிவித்துள்ளது.

அதனை அடுத்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என அதில் கூறப்பட்டுள்ளது.

Tags :