Advertisement

பராமரிப்பு பணிகள் காரணமாக இந்த ரெயில் சேவைகள் ரத்து

By: vaithegi Tue, 29 Nov 2022 11:14:43 AM

பராமரிப்பு பணிகள் காரணமாக இந்த ரெயில் சேவைகள் ரத்து

சென்னை: ரெயில் சேவைகள் ரத்து ..... ரெயில் சேவைகள் ரத்துதெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் பராமரிப்பு பணிகள் காரணமாக கீழ்கண்ட ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:- சென்னை எழும்பூர்-சேலம் (வண்டி எண்:22153) இடையே இரவு 11.55 மணிக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் நாளை (புதன்கிழமை) 1, 2-ந்தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

இதனை அடுத்து சேலம்-எழும்பூர் (22154) இடையே இரவு 9.30 மணிக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 1, 2, 3-ந்தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல்-கோவை (12679) இடையே மதியம் 2.30 மணிக்கும், கோவை-எம்.ஜி.ஆர். சென்டிரல் (12680) இடையே காலை 6.15 மணிக்கும் இயக்கப்படும் இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில்கள் வருகிற டிசம்பர் 3-ந்தேதி முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

railway service,maintenance work ,ரெயில் சேவை,பராமரிப்பு பணி

அதைத்தொடர்ந்து எம்.ஜி.ஆர். சென்டிரல்-கோவை (12675) இடையே காலை 6.10 மணிக்கும், கோவை-எம்.ஜி.ஆர். சென்டிரல் (12676) இடையே மதியம் 3.15 மணிக்கும் இயக்கப்படும் கோவை எக்ஸ்பிரஸ் ரெயில்கள் வருகிற டிசம்பர் 3-ந்தேதி முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

மேலும் எம்.ஜி.ஆர். சென்டிரல்-கோவை (12243) இடையே காலை 7.10 மணிக்கும், கோவை-எம்.ஜி.ஆர். சென்டிரல் (12244) இடையே மதியம் 3.05 மணிக்கும் இயக்கப்படும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில்கள் வருகிற டிசம்பர் 3-ந்தேதி முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது என அதில் கூறப்பட்டுள்ளது.

Tags :