Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • G – 20 மாநாட்டை முன்னிட்டு இந்த ரயில் சேவைகள் தற்காலிகமாக ரத்து

G – 20 மாநாட்டை முன்னிட்டு இந்த ரயில் சேவைகள் தற்காலிகமாக ரத்து

By: vaithegi Sun, 03 Sept 2023 4:36:59 PM

G – 20 மாநாட்டை முன்னிட்டு இந்த ரயில் சேவைகள் தற்காலிகமாக ரத்து


இந்தியா: டெல்லியில் செப்டம்பர் 9 ,10,11 ஆகிய 3 நாட்கள் ஜி-20 உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு ரயில் சேவைகள் தற்காலிகமாக ரத்து ...நடப்பு ஆண்டு இந்தியாவின் முக்கிய நகரங்களில் ஜி-20 மாநாடு நடைபெற்று கொண்டு வருகிறது.

இதையடுத்து வரும் செப். 9,10,11 ஆகிய தேதிகளில் தலைநகர் டெல்லியில் ஜி-20 மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாடு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த மாநாட்டில் உறுப்பு நாடுகளை சேர்ந்த முக்கிய தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். இதனையடுத்து டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் படுத்தப்பட்டு வருகிறது.

rail services,g20 summit ,ரயில் சேவைகள்,ஜி 20 மாநாடு

அந்த வகையில் டெல்லியின் முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு கருதி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அதை தொடர்ந்து டெல்லி விமான நிலையத்திற்கு வருகை தரும் 80 விமான சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளது.

எனவே அதன் தொடர்ச்சியாக வரும் செப். 9,10 ஆகிய தேதிகளில் சுமார் 207 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. குறுகிய காலத்தில் இயக்கப்படும் 36 ரயில்கள் மட்டுமே இயக்கப்படும் என்று ரயில்வே துறை தெரிவித்துள்ளது.


Tags :