Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஒடிசா ரயில் விபத்து காரணமாக இன்று இந்த ரயில் சேவைகளை ரத்து

ஒடிசா ரயில் விபத்து காரணமாக இன்று இந்த ரயில் சேவைகளை ரத்து

By: vaithegi Fri, 09 June 2023 10:13:46 AM

ஒடிசா ரயில் விபத்து காரணமாக இன்று இந்த ரயில் சேவைகளை ரத்து

சென்னை: இன்று 4 ரயில் சேவைகளை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு .... ஒடிசாவில் கடந்த 2ம் தேதி இரவு 7 மணியளவில் கோர ரயில் விபத்து அரங்கேறியது. சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், சரக்கு ரயில் மற்றும் ஹவுரா சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் ஆகியவை அடுத்தடுத்து ஒன்றோடொன்று அதி பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளாகின.

இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த ரயில் விபத்து பற்றி சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது. 4 தண்டவாளங்களங்களில் 2 மட்டுமே சரிசெய்யப்பட்டுள்ளதால் அந்த வழித்தடத்தில் குறைந்த எண்ணிக்கையில், மிதமான வேகத்தில் ரயில்கள் இயக்கப்பட்டு கொண்டு வருகின்றன.

odisha train accident,train service ,ஒடிசா ரயில் விபத்து ,ரயில் சேவை

இதனால் பல்வேறு ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுகின்றன. அந்தவகையில் இன்று 4 ரயில் சேவைகளை ரத்துசெய்வதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது. ஹய்டுது அதன்படி,சென்னை செண்ட்ரல்- ஷாலிமார் கோரமண்டல் விரைவு ரயில் சேவை இன்று ரத்து செய்யப்படுகிறது. ஹவுராவில் இருந்து சென்னை செண்ட்ரல் செல்லும் சென்னை ரயில் விரைவு ரெயிலும் இன்று ரத்து செய்யபட்டு உள்ளது.

மேலும் சில்காத்திலிருந்து புறப்படும் சில்காத்- தாம்பரம் விரைவு ரயில் சேவை இன்று ரத்து செய்யப்படும்.ஜோலார்பேட்டை, காட்பாடி வழியே ஹவுரா செல்லும் மைசூரு- ஹவுரா விரைவு ரயில் சேவை ஜூன் 11ம் தேதி ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

Tags :