Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நான் பரிந்துரைப்பதை வேண்டாம் என்று சொல்லவே விரும்புகிறார்கள்; அதிபர் டிரம்ப் அதிரடி

நான் பரிந்துரைப்பதை வேண்டாம் என்று சொல்லவே விரும்புகிறார்கள்; அதிபர் டிரம்ப் அதிரடி

By: Nagaraj Wed, 29 July 2020 6:59:33 PM

நான் பரிந்துரைப்பதை வேண்டாம் என்று சொல்லவே விரும்புகிறார்கள்; அதிபர் டிரம்ப் அதிரடி

நான் பரிந்துரைத்ததால் நிராகரித்துள்ளனர்...ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தின் பயன்பாட்டை நான் பரிந்துரைத்ததால்தான் கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு பயன்படுத்துவதில் இருந்து இது நிராகரிக்கப்பட்டது என அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.

மேலும், ‘எதையாவது பயன்படுத்த வேண்டும் என்று நான் கூறினால், அது வேண்டாம் என்று சொல்லவே அவர்கள் விரும்புகிறார்கள்’ எனவும் தெரிவித்தார். கொரோனா வைரஸ் தொற்று தடுப்பூசியை கண்டுபிடிப்பதற்கு உலகநாடுகள் தீவிரமாக முயற்சி செய்துவரும் நிலையில், கொரோனா வைரஸ் தொற்றை குணப்படுத்த ஹைட்ராக்சி குளோரோகுயின் சிறந்த மருந்து என ட்ரம்ப் தொடர்ந்து கூறிவருகிறார்.

rejected,corona,treatment,president trump,vaccine ,நிராகரிக்கப்பட்டது, கொரோனா, சிகிச்சை, அதிபர் டிரம்ப், தடுப்பூசி

ஆனால் இந்த மருந்தை பயன்படுத்துவதால் தீவிர உடல்நல கோளாறுகள் உண்டாகும் என்பதால் கொரோனா வைரஸ் தொற்றுக்கான சிகிச்சையில் ஹைட்ராக்சி குளோரோகுயினை பயன்படுத்த வேண்டாம் என்று அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் கடந்த மாதம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

அத்துடன் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கும் சிகிச்சையில் ஹைட்ராக்சி குளோரோகுயின் பலனளிக்கிறது என்பதற்கு இதுவரை எந்த ஆதாரமும் இல்லை என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனிடையே ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தின் பயன்பாட்டை தாம் பரிந்துரைத்ததால்தான் கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு பயன்படுத்துவதில் இருந்து இது நிராகரிக்கப்பட்டது என ட்ரம்ப் கூறியுள்ளார். நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலுக்கு முன்னதாக கொரோனா வைரஸ் தொற்று தடுப்பூசியை கண்டுபிடிப்பதாக ட்ரம்ப் முன்னர் கூறியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.

Tags :
|