Advertisement

மீன்கள் வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்!!!

By: Nagaraj Sat, 23 July 2022 09:22:33 AM

மீன்கள் வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்!!!

சென்னை: நாம் கவனமாக இருந்தால் மட்டுமே ஏமாற்றுபவரிடம் இருந்து தப்பித்துக் கொள்ள முடியும். அதுபோல்தான் மீன்கள் வாங்க செல்லும் போது மிகவும் கவனமாக பார்த்து வாங்கவேண்டும். மீன் பார்க்கும்போதே புதிது போல் பளபளப்பாகவும், நல்ல நிறமாகவும் இருக்க வேண்டும். மீனின் கண்களை கவனிக்க வேண்டும்.

அது பார்க்கும்போது தெளிவாக இருந்தால் நல்ல மீன்.ஒருவேளை அதன் கண்கள் மங்களாக இருந்தால் வாங்க வேண்டாம். மீனின் உடல் பகுதியை விரலால் அழுத்திப் பார்க்க வேண்டும். இறுக்கமாக இருந்தால் நல்ல மீன். கொழகொழவென இருந்தால் பழைய மீன் அல்லது கெட்டுப்போன மீனாக இருக்கலாம். புதிய மீன் என்றால் வாலை பிடித்து தூக்கிப் பார்த்தால் நேராக பளபளவென தொங்கும். ஆனால் பழைய மீன், ஐஸ் கட்டியில் வைக்கப்பட்ட மீன் எனில் வளைந்து இருக்கும்.

fish,odor,wounds,do not buy,scales ,மீன், துர்நாற்றம், காயங்கள், வாங்காதீர்கள், செதில்கள்

உடல் வளையும். பின் மீனின் செதில் பகுதியை தூக்கிப் பார்க்க வேண்டும். அது இளஞ்சிவப்பு நிறத்தில் இரத்த ஓட்டம் ஃபிரெஷாக இருந்தால் அது நல்ல மீன். புது மீன். நிறம் மாறி இரத்த ஈரப்பதமின்றி உறைந்து இருந்தால் அது ஐஸ் கட்டியில் இருந்த பழைய மீன். அதேபோல் மீனின் உடல் முழுவதும் செதில்கள் நிறைய இருக்க வேண்டும். தொட்டால் கையில் ஒட்டக் கூடாது. உதிரக்கூடாது. அப்படி உதிர்ந்து தானாக கொட்டுகிறது எனில் பழைய மீனாக இருக்கலாம்.

மீன் ஒரு போதும் மூக்கை துளைக்கும் அளவிற்கு துர்நாற்றம் வீசாது. அப்படி துர்நாற்றம் வீசுகிறதா என்பதையும் பார்க்க வேண்டும். வால் கடினமாக இருக்க வேண்டும். மீன் மீது காயங்கள், வெட்டு இருந்தால் வாங்காதீர்கள். எனவே விழிப்புணர்வுடன் மீன் வாங்குங்கள்.

Tags :
|
|
|