Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ரேஷன் கடைகளுக்கு மாதத்தின் மூன்றாவது வார சனிக்கிழமை விடுமுறை

ரேஷன் கடைகளுக்கு மாதத்தின் மூன்றாவது வார சனிக்கிழமை விடுமுறை

By: Monisha Fri, 18 Sept 2020 09:41:52 AM

ரேஷன் கடைகளுக்கு மாதத்தின் மூன்றாவது வார சனிக்கிழமை விடுமுறை

செப்டம்பர் மாதம் முதல் நவம்பர் வரை ரேஷன் கடைகளுக்கு மாதத்தின் மூன்றாவது வார சனிக்கிழமை விடுமுறை நாட்களாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக நிர்வாக இயக்குனர் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் இது தொடர்பாக கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக ரேஷன் அட்டைதாரரின் வீடுகளுக்கு சென்று ரேஷன் கடை ஊழியர்கள் டோக்கன் வழங்கும் பணியை மேற்கொண்டனர்.

ration shop,food item,saturday,holiday,ration card ,ரேஷன் கடை,உணவு பொருள்,சனிக்கிழமை,விடுமுறை,ரேஷன் அட்டை

ரேஷன் கடையின் விடுமுறை நாட்களான கடந்த ஜூலை 10, ஆகஸ்டு 7, செப்டெம்பர் 4 ஆகிய தேதிகளில் பணியாற்றினர். எனவே விடுமுறை நாளிலும் ரேஷன் கடைகள் வேலை நாட்களாக செயல்பட்டதற்கு பதிலாக மாதத்தின் மூன்றாவது வார சனிக்கிழமை விடுமுறை அளிக்கப்படுகிறது.

செப்டம்பர் மாதம் 19-ந்தேதி, வரும் அக்டோபர் 17-ந்தேதி, நவம்பர் 21-ந்தேதி ஆகிய நாட்கள் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை நாட்களாக அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு அந்த சுற்றக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags :