Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உத்தரபிரதேசயில் இந்த நாள் ... விடுமுறையாக இருக்கப் போவதில்லை.

உத்தரபிரதேசயில் இந்த நாள் ... விடுமுறையாக இருக்கப் போவதில்லை.

By: vaithegi Sat, 16 July 2022 2:13:56 PM

உத்தரபிரதேசயில் இந்த நாள் ...   விடுமுறையாக இருக்கப் போவதில்லை.

உத்தரபிரதேசம் : பல்வேறு மதங்கள், மொழிகள், கலாச்சாரங்களை உள்ளடக்கிய இந்தியாவில் அனைவரும் ஒன்றிணைந்து சமத்துவமாக கொண்டாடும் ஒரு நிகழ்வு என்றால் அது சுதந்திர தின விழா தான். நாட்டின் சுதந்திர தின விழாவானது அனைத்து மக்களாலும் ஒருசேர கொண்டாடப்படும் அரசு பொது விழா ஆகும்.

அதன்படி இந்த ஆண்டு வரும் ஆகஸ்ட் மாதம் 15ம் தேதியன்று 75 வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. இந்த தினம் அரசு பொது விடுமுறையாக இருப்பதால் நாடு முழுவதும் உள்ள அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் அனைத்தும் முழுமையாக மூடப்படும்.

holiday,uttar pradesh , விடுமுறை,உத்தரபிரதேசம்

மேலும் இந்த ஆண்டிற்கான சுதந்திர தின விழாவை சிறப்பாக கொண்டாடுவதற்கு பல மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் திட்டமிட்டு வரும் நிலையில், இது 75வது ஆண்டு என்பதால் ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்த ஆண்டு சிறப்பு நிகழ்ச்சியாக சுதந்திர தினம் கொண்டாடப்படும் என உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்கள் தெரிவித்துள்ளார். அதாவது, உத்தரப்பிரதேசத்தைப் பொறுத்தவரை இந்த ஆண்டு சுதந்திர தினம் விடுமுறையாக இருக்கப் போவதில்லை.

அதனால் மாநிலம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு சாரா அலுவலகங்களுடன் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் சந்தைகள் இந்த ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி மூடப்படாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. அதன்படி, உத்திர பிரதேச மாநிலத்தில் கடந்த 75 ஆண்டுகளில் இப்படி நடப்பது இதுவே முதல் முறையாகும். இப்போது 75 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, தீபாவளி பண்டிகையின் போது செய்வது போல் மாநிலம் முழுவதும் சிறப்பு சுகாதார இயக்கம் மேற்கொள்ளப்படும் என்றும், இதை தேசிய பொது இயக்கமாக மாற்ற வேண்டும் என்வும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இது குறித்து தலைமைச் செயலாளர் டி.எஸ்.மிஸ்ரா கூறுகையில், ‘சுதந்திரப் போராட்ட தியாகிகள் தொடர்புடைய இடங்களில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும். சுதந்திர தின வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிகழ்ச்சி நடைபெற வேண்டும். சுதந்திர தின விழாவை வெறும் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சியாக மட்டும் கடைபிடிக்க கூடாது. அனைத்து தரப்பு மக்களும் அதில் பங்கேற்க வேண்டும். அந்த வகையில் சமூக அமைப்புகள், மக்கள் பிரதிநிதிகள், என்சிசி மற்றும் என்எஸ்ஓ கேடட்கள், வர்த்தக அமைப்புகளை இதனுடன் இணைக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags :