Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பொறியியல் கலந்தாய்வில் ரேண்டம் எண்ணை வழங்கும்போது இது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது

பொறியியல் கலந்தாய்வில் ரேண்டம் எண்ணை வழங்கும்போது இது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது

By: vaithegi Thu, 22 June 2023 11:12:03 AM

பொறியியல் கலந்தாய்வில் ரேண்டம் எண்ணை  வழங்கும்போது இது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது

சென்னை: நடப்பாண்டு பொறியியல் கலந்தாய்வில் ரேண்டம் எண்ணை வழங்கும்போது 10-ம் வகுப்பு மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது .... பொறியியல் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த மே 5-ம் தேதி தொடங்கி ஜூன் 4ஆம் தேதி நிறைவடைந்தது. பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு ரேண்டம் எண்கள் வழங்கப்படும்.

அதன்பின்னர் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு கலந்தாய்வு நடைபெறுவது வழக்கமான ஒன்று. ஒரே கட் ஆப் மதிப்பெண்கள் பெற்று இருந்தால் , அவர்கள் பெற்ற மதிப்பெண் பிறந்த தேதி அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்படும்.

random number,online application registration ,ரேண்டம் எண்,ஆன்லைன் விண்ணப்ப பதிவு

இந்த நிலையில் 2023-24ம் கல்வியாண்டு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் தயாரிக்கும் போது 10-ம் வகுப்பு மதிப்பெண் கணக்கிடுவதிலிருந்து விலக்கம் அளித்து, மாணவர் சேர்க்கைக்கான விதியில் திருத்தம் செய்து அரசாணை வெளியிடப்பட்ட உ ள்ளது. இதன் மூலம் பொறியியல் மாணவர் சேர்க்கை விதிமுறைகளில் மாற்றம் செய்து உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.

கொரோனா காரணமாக 10-மேலும் ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறாததால் விதிகளில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. அத்துடன் நடப்பாண்டு பொறியியல் மாணவர் சேர்க்கை நடப்பாண்டில் சமவாய்ப்பு எண் வழங்கும் போது, 10 ஆம் வகுப்பு மதிப்பெண் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags :