Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்துள்ள விளையாட்டு வீரர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு இந்த தேதி

பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்துள்ள விளையாட்டு வீரர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு இந்த தேதி

By: vaithegi Fri, 26 May 2023 10:10:27 AM

பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்துள்ள விளையாட்டு வீரர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு இந்த தேதி


சென்னை: தமிழ்நாடு பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்துள்ள விளையாட்டு வீரர்களுக்கான முதல்கட்ட சான்றிதழ் சரபார்ப்பு வருகிற ஜூன் 5 முதல் 14 வரை நடைபெறும் என்று பொறியியல் கலந்தாய்வு மாணவர் சேர்க்கை குழு அறிவிப்பு ...

இதையடுத்து இதுதொடர்பாக பொறியியல் கலந்தாய்வு மாணவர் சேர்க்கை குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், “2023-ம் கல்வியாண்டில் நடைபெறும் பொறியியல் கலந்தாய்வுக்கு விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டுக்கு விண்ணப்பித்த மாணக்கர்களுக்கான முதல் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு வருகின்ற 05.06.2023 முதல் 14.06.2023 வரை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறவுள்ளது.

sportsperson,engineering consultancy ,விளையாட்டு வீரர்,பொறியியல் கலந்தாய்வு

எனவே இதற்கான கால அட்டவணை www.tneaonline.org'ல் கொடுக்கப்பட்டு உள்ளது. அதில் மாணக்கர்கள் தங்களது பெயருக்கேதிரே கொடுக்கப்பட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் நேரடியாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், சான்றிதழ் சரிபார்பிற்கான நாள் மற்றும் நேரம் மாணக்கர்களின் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் மற்றும் கைபேசிக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும்.

சான்றிதழ் சரிபார்ப்புக்கு வரும் விளையாட்டு வீரர்கள் தங்களது அனைத்து அசல் சான்றிதழ்கள் மற்றும் அவற்றின் 2 நகல்களுடன் தேவையான படிவங்களையும் கொண்டு வர அறிவுறுத்தப்படுகிறது. மேலும் விளையாட்டு வீரர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்புக்கு வரும் மாணக்கர்கள் மட்டும் நேரில் வரவேண்டும் மற்ற மாணக்கர்களின் சான்றிதழ் சரிபார்பு இனையதளம் வாயிலாகவே நடைபெறும்,. விளையாட்டு வீரர்களுக்கான 2-ம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு கால அட்டவணை விரைவில் அறிவிக்கப்படும்” என அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.



Tags :