Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வரலாற்றில் முதல் முறையாக மனிதர்களுடன் ஹைபர்லூப் பயணத்தை சோதித்து சாதனை

வரலாற்றில் முதல் முறையாக மனிதர்களுடன் ஹைபர்லூப் பயணத்தை சோதித்து சாதனை

By: Karunakaran Tue, 10 Nov 2020 07:58:54 AM

வரலாற்றில் முதல் முறையாக மனிதர்களுடன் ஹைபர்லூப் பயணத்தை சோதித்து சாதனை

காற்று இல்லாத வெற்றிட குழாய்க்கும் உருளை வடிவிலான வாகனத்துக்கும் இடையில் காந்த புலன்களை உருவாக்கி குழாய் வழியே ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு விமானத்தை காட்டிலும் 2 மடங்கு வேகத்தில் பயணிப்பதே ஹைபர்லூப் என்று அழைக்கப்படுகிறது. இதில் மணிக்கு 1,000 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்க முடியும்.

கடந்த 2012-ம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த டெல் நிறுவனத்தின் தலைவர் எலன் மாஸ்க்கின் சிந்தனையில் உதித்ததே இந்த ஹைபர்லூப் திட்டம். அதன்பின், அமெரிக்காவின் பிரபல விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் உள்பட ஏராளமான நிறுவனங்கள் ஹைபர்லூப் திட்டத்தை செயல்படுத்தும் தீவிர முயற்சியில் இறங்கின.

america,hyperloop trip,humans,virgin hyperloop ,அமெரிக்கா, ஹைப்பர்லூப் பயணம், மனிதர்கள், கன்னி ஹைப்பர்லூப்

ஆனால் அனைத்து நிறுவனங்களுமே ஆட்கள் இல்லாமல் வெற்று வாகனத்துடனேயே ஹைபர்லூப் பயணத்தை சோதித்து உள்ளன. இந்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த விர்ஜின் ஹைபர்லூப் என்கிற நிறுவனம் வரலாற்றில் முதல் முறையாக மனிதர்களுடன் ஹைபர்லூப் பயணத்தை சோதித்து சாதனை படைத்துள்ளது.

அந்த நிறுவனத்தின் நிர்வாகிகளான ஜோஸ் கீகெல் மற்றும் சாரா ஆகிய இருவரும் 1 மணி நேரத்தில் 172 கிலோமீட்டர் தூரத்தை கடந்து ஹைபர்லூப் பயணத்தை வெற்றிகரமாக முடித்தனர். இந்த நிகழ்வு ஹைபர்லூப் பயண திட்டத்தை செயல்படுத்துவதில் மிகப்பெரும் மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. வரலாற்றில் முதல் முறையாக மனிதர்களுடன் ஹைபர்லூப் பயணத்தை சோதித்து சாதனை படைத்துள்ளது.

Tags :
|