Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • காங்கிரஸ் கட்சியின் அரசியல் இப்படிதான்: மத்திய அமைச்சர் அமித்ஷா விமர்சனம்

காங்கிரஸ் கட்சியின் அரசியல் இப்படிதான்: மத்திய அமைச்சர் அமித்ஷா விமர்சனம்

By: Nagaraj Thu, 23 Nov 2023 3:46:06 PM

காங்கிரஸ் கட்சியின் அரசியல் இப்படிதான்: மத்திய அமைச்சர் அமித்ஷா விமர்சனம்

ஜெய்ப்பூர்: காங்கிரஸ் குறித்து விமர்சனம்... ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டம் ஹைதரன் பா.ஜ.க. சார்பில்நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.

இந்திய கலாசாரத்தின் மரியாதையை நிலைநாட்ட பா.ஜ.க. அச்சமின்றி உழைத்து வரும் அதே வேளையில், காங்கிரஸ் கட்சி எப்போதும் ஒரு தரப்பை (சிறுபான்மையினரை) திருப்திப்படுத்த அரசியல் செய்து வருகிறது.

ராஜஸ்தானில் பல்வேறு போட்டித் தேர்வுகளின் வினாத்தாள் கசிந்துள்ளது. அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு ஊழலில் அனைத்து சாதனைகளையும் முறியடித்துள்ளது. ராஜஸ்தானின் 40 லட்சம் இளைஞர்களை ஏமாற்றியுள்ளது. இவ்வாறு அமித் ஷா கூறினார்.

முன்னதாக, சிகார் மாவட்டம், நவல்கரில் அமித்ஷா பேசியதாவது: திருப்தி அரசியலுக்கும், போட்டித் தேர்வு வினாத்தாள் கசிவுக்கும், பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கும் உத்தரவாதம் அளிக்கும் அரசு இங்குள்ள காங்கிரஸ் அரசு.

congress,ayodhya,temple,union minister,competitive examination ,காங்கிரஸ், அயோத்திராமர், கோவில், மத்திய அமைச்சர், போட்டித் தேர்வு

ராஜஸ்தானில் கடந்த 5 ஆண்டுகளில் 40-க்கும் மேற்பட்ட கலவரங்கள் நடந்துள்ளன. காங்கிரசுக்கு மாநிலத்தை எப்படி நிர்வகிப்பது என்று தெரியவில்லை. பிரதமர் மோடி சார்பாக நான் உறுதியளிக்கிறேன். ராஜஸ்தானில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் கலவரம் இல்லாத மாநிலமாக மாறும்.

இந்தத் தேர்தல் நமது வேட்பாளர்களின் தலையெழுத்தை மட்டும் தீர்மானிக்கப் போவதில்லை. இது ராஜஸ்தான் மற்றும் இந்தியாவின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கும். 2024-ல் மோடி மீண்டும் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்படுவதை உங்கள் வாக்கு உறுதி செய்யும்.

மேலும் உங்கள் வாக்கு ஊழல் கெலாட் அரசாங்கத்தை ஆட்சியில் இருந்து அகற்ற உதவும். அயோத்தியில் ராமர் கோயிலுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அங்குள்ள பிரமாண்ட ராமர் கோவில் ஜனவரி 22-ம் தேதி திறக்கப்பட உள்ளது.

தேர்தல் நாளில் தாமரை சின்னத்திற்கு வாக்களியுங்கள். உங்களை அயோத்தி ராமர் கோவிலுக்கு இலவசமாக அழைத்துச் செல்வது உறுதி. இவ்வாறு அமித் ஷா பேசினார்.

Tags :
|