Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 1.5 பில்லியன் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதற்கு காரணம் இதுதான்

1.5 பில்லியன் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதற்கு காரணம் இதுதான்

By: Nagaraj Sat, 10 Dec 2022 3:12:41 PM

1.5 பில்லியன் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதற்கு காரணம் இதுதான்

அமெரிக்கா: 1.5 பில்லியன் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதற்கு காரணம் இதுதான் என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் கடந்த சில மாதங்களுக்கு முன்பே ட்விட்டரை வாங்கினார். அதற்காக பல்லாயிரம் கோடி ரூபாய்களை வங்கிகளிடமிருந்து கடன் வாங்கினார்.

அதனால் இந்த கடன்களை திரும்ப செலுத்துவதற்காக ட்விட்டரில் பல மாற்றங்களை தொடர்ந்து செய்து வருகிறார். அவ்வகையில் சுமார் 330 மில்லியன் பயனர்கள் தற்போது ட்விட்டரில் கணக்கு வைத்துள்ளனர்.

announcement,elon musk,twitter accounts disabled,data ,அறிவிப்பு, எலான் மஸ்க், ட்விட்டர் கணக்குகள் முடக்கம், தரவுகள்

அவர்களில் பல வருடங்களாக பயன்படுத்தாமல் இருக்கும் ட்விட்டர் கணக்குகளையும் மற்றும் போலியான கணக்குகளையும் கண்டறிந்து நீக்க உள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. அவ்வகையில் 1.5 பில்லியன் பயனர் கணக்குகளை நீக்கம் செய்ய உள்ளதாக எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதன் மூலமாக ட்விட்டரில் தவறான தகவல் பரப்புவதை குறைக்க முடியும் எனவும் தளத்தின் தரவுகளை மேம்படுத்த முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags :