Advertisement

இங்கு நாளை பள்ளிகளுக்கு விடுமுறை .. இது தான் காரணம்

By: vaithegi Fri, 02 Dec 2022 7:45:58 PM

இங்கு நாளை பள்ளிகளுக்கு விடுமுறை  .. இது தான் காரணம்

புது டெல்லி : அரசு பள்ளிகளுக்கு விடுமுறை ... மாநகராட்சி தேர்தல் நடக்க உள்ள நிலையில் நாளை (டிசம்பர் 3-ம் )தேதி அனைத்து அரசு பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து கல்வி இயக்குனரகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.டெல்லி மாநகராட்சிக்கான தேர்தல் வாக்குப்பதிவு டிசம்பர் 3ம் தேதியான நாளை நடத்தப்பட உள்ளது.

இதனால் அரசு பள்ளிகளில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின்றது. இதையடுத்து தேர்தல் பணிகள் காரணமாக டிசம்பர் 3- ம் தேதி சனிக்கிழமை அன்று அனைத்து அரசு பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்க உத்தரவிட்டு டெல்லி கல்வி இயக்குனரகம் பள்ளி தலைவர்கள், அதிகாரிகளுக்கு அறிக்கை வெளியிட்டுள்ளது.

holiday,new delhi,election ,விடுமுறை  ,புது டெல்லி,தேர்தல்

இதையடுத்து சனிக்கிழமையான நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பதால், இதனை ஈடுசெய்ய 10.12.2022 அதாவது 2 - வது சனிக்கிழமை அன்று பள்ளிகள் செயல்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இதேபோன்று வெளிநாட்டு மருத்துவ பட்டதாரிகளுக்கான தேர்வு (FMGE) டிசம்பர் 2ம் தேதியான இன்று அறிவித்திருந்த நிலையில் அதனை ஜனவரி 20, 2023 அன்று மாற்றியமைத்துள்ளது.

Tags :