Advertisement

தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு வானிலை இப்படிதான்

By: vaithegi Wed, 11 Oct 2023 3:55:22 PM

தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு வானிலை இப்படிதான்


சென்னை: அடுத்த 2 நாட்களுக்கு மதுரை, விருதுநகர், நீலகிரி உள்ளிட்ட சில மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும் ... தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று கோயம்புத்தூர், திண்டுக்கல்,

மேலும் புதுக்கோட்டை, தேனி, விருதுநகர், தஞ்சாவூர், மதுரை, நீலகிரி, திருப்பூர் மற்றும் புதுவை பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

weather,madurai,virudhunagar,nilgiris ,வானிலை ,மதுரை, விருதுநகர், நீலகிரி


அதனைத் தொடர்ந்து நாளை (அக்.12) தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதனை அடுத்து அக்டோபர் 17ஆம் தேதி வரை மழை நீடிக்கும் எனவும் சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும் எனவும் வெப்பநிலை அதிகபட்சமாக 35 டிகிரி செல்சியஸ் வரை நீடிக்கும் எனவும் வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags :