Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பாஜக விரும்பாத விஷயம் இது... ராகுல் காந்தி குற்றச்சாட்டு

பாஜக விரும்பாத விஷயம் இது... ராகுல் காந்தி குற்றச்சாட்டு

By: Nagaraj Mon, 21 Nov 2022 9:49:31 PM

பாஜக விரும்பாத விஷயம் இது... ராகுல் காந்தி குற்றச்சாட்டு

புதுடில்லி: ஆதிவாசிகள் நகர்ப்புறங்களில் வாழ்வதையோ, அவர்களுக்கு கல்வி, சுகாதாரம் மற்றும் வேலைவாய்ப்பைப் பெறுவதையோ பாஜக விரும்பவில்லை என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.


கடந்த செப்டம்பர் 7-ம் தேதி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இந்திய ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் கன்னியாகுமரியில் பாதயாத்திரையைத் தொடங்கினார். காஷ்மீர் வரையிலான இந்தப் பயணம் கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா போன்ற தென் மாநிலங்களில் தொடர்ந்து மகாராஷ்டிராவுக்குச் சென்றது.

இந்நிலையில் குஜராத் மாநிலம் சூரத் நகருக்கு ராகுல் காந்தி சென்றுள்ளார். கூட்டத்தில் அவர் பேசுகையில், இந்தியாவின் முதல் உரிமையாளர்கள் ஆதிவாசிகள். ஆனால், பாஜக அவர்களை வனவாசிகள் என்கிறார்கள். அவர்களிடம் இருந்து நிலங்கள் பறிக்கப்பட்டு 2 முதல் 3 தொழிலதிபர்களுக்கு பா.ஜ.க. வழங்கப்பட்டிருக்கிறது.

gujarat,modi,rahul gandhi, ,ஆதிவாசிகள், மோடி, ராகுல் காந்தி

ஆதிவாசிகள் நகர்ப்புறங்களில் வாழ்வதையோ, அவர்களுக்கு கல்வி, சுகாதாரம் மற்றும் வேலைவாய்ப்பைப் பெறுவதையோ பாஜக விரும்பவில்லை என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.


மத்தியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் போது கொண்டு வரப்பட்ட பஞ்சாயத்துகள் (பட்டியலிடப்பட்ட பகுதிகளுக்கு நீட்டிப்பு) சட்டம், வன உரிமைச் சட்டம், நில உரிமைச் சட்டம், பஞ்சாயத்து ராஜ் சட்டம் போன்றவற்றை வலுவிழக்கச் செய்கிறது மோடி அரசு.

நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் இந்த அனைத்து சட்டங்களையும் வலுப்படுத்துவோம். முன்னதாக, ஜல்கான் ஜமோத்தில் பழங்குடியின பெண் தொழிலாளர் கூட்டமைப்பின் மற்றொரு கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, உங்கள் நலனுக்காக புதிய சட்டங்களை இயற்றுவோம் என்று கூறினார்.

Tags :
|