Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா வைரசால் எளிதில் பாதிக்க இந்த ரத்த வகை முக்கிய பங்கு வகிக்கலாம்

கொரோனா வைரசால் எளிதில் பாதிக்க இந்த ரத்த வகை முக்கிய பங்கு வகிக்கலாம்

By: Karunakaran Fri, 12 June 2020 2:47:54 PM

கொரோனா வைரசால் எளிதில் பாதிக்க இந்த ரத்த வகை முக்கிய பங்கு வகிக்கலாம்

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகில் உள்ள 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு நாடுகள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. தற்போது வரை கொரோனா வைரஸுக்கு மருந்து ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை. உலகம் முழுவதும் உள்ள பல்வேறு மருத்துவ வல்லுநர்கள் கொரோனா வைரசின் தாக்கம் குறித்து ஆய்வு நடத்தி வருகின்றனர்.

இந்த ஆய்விலிருந்து புதுப்புது தகவல்கள் வெளியாகி வருகின்றன. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட சிலர் தீவிரமாக நோய்வாய்ப்பட்டு உயிரிழக்கிறார்கள், சிலருக்கு குறைவான அறிகுறி உள்ளது, சிலர் அறிகுறியே இல்லாமல் உள்ளனர் என்பது குறித்து ஆய்வாளர்கள் ஆராய்ந்துள்ளனர். இதற்கு குறிப்பிட்ட ரத்த வகையே காரணம் என தெரிய வந்துள்ளது. சமீபத்தில், கொரோனா வைரசின் தாக்கம் குறித்து 23andMe என்ற மரபணு-சோதனை நிறுவனம் ஆய்வு நடத்தியது. இதில் ஓ வகை ரத்தம் உள்ளவர்கள் கொரோனா வைரசிடம் இருந்து பாதுகாப்பாக உள்ளதாக தெரிய வந்துள்ளது.

coronavirus,blood,o blood group,genetic testing ,ரத்த வகை,கொரோனா,ஓ வகை,மரபணு சோதனை

பிற ரத்த வகைகளைக் கொண்ட நபர்களை விட, ஓ ரத்த வகை கொண்ட நபர்களுக்கு பாதிப்பு 9-18 சதவீதம் குறைவாக உள்ளதாக இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. மேலும், ஏ வகை ரத்தம் உள்ளவர்களை கொரோனா தாக்கினால் கடுமையான சிக்கல்களை சந்திப்பதுடன், உயிருக்கும் ஆபத்து நேரிடலாம்என ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

ஏ பாசிட்டிவ், ஏ நெகட்டிவ், ஏபி பாசிட்டிவ் மற்றும் ஏபி நெகட்டிவ் ஆகிய ரத்த வகை உள்ளவர்களுக்கு கொரோனா வைரசால் ஏற்படும் ஆபத்து அதிகம் எனவும், ஓ வகையில் பாதிப்பு குறைவு எனவும் தெரிய வந்துள்ளது. இத்தாலி மற்றும் ஸ்பெயினில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்விலும் இந்த முடிவே வெளியாகியுள்ளன.

Tags :
|