Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கடந்த ஆண்டை காட்டிலும் கூடுதலாக இந்தாண்டு 65% பொறியியல் இடங்கள் கவுன்சிலிங் மூலம் நிரப்பல்

கடந்த ஆண்டை காட்டிலும் கூடுதலாக இந்தாண்டு 65% பொறியியல் இடங்கள் கவுன்சிலிங் மூலம் நிரப்பல்

By: vaithegi Mon, 23 Oct 2023 11:57:47 AM

 கடந்த ஆண்டை காட்டிலும் கூடுதலாக இந்தாண்டு 65% பொறியியல் இடங்கள் கவுன்சிலிங் மூலம் நிரப்பல்

சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ் இயங்கி வரும் உறுப்புக் கல்லூரிகளில் சேருவதற்கான 3 கட்ட கலந்தாய்வும் முடிவடைந்துவிட்டது.

இதையடுத்து கடந்தாண்டை காட்டுலும் இந்தாண்டு குறைவான விகிதமே பொறியியல் படிப்பில் சேர ஆர்வம் காட்டியதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். அந்த வகையில், இந்தாண்டு 1.03 லட்சம் பொறியியல் இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டு உள்ளது.

counseling,engineering placements ,கவுன்சிலிங் ,பொறியியல் இடங்கள்


ஆனால் அதே நேரத்தில், 57 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், இக்கல்வியாண்டில் 65% பொறியியல் இடங்கள் கவுன்சிலிங் மூலம் நிரப்பப்பட்டுள்ளதாக தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் (DoTE) தெரிவித்து உள்ளது.

கடந்த ஆண்டில் 59.90% இடங்கள் மட்டுமே கவுன்சிலிங் மூலமாக நிரப்பப்பட்ட நிலையில் இந்தாண்டு கூடுதலாக நிரப்பப்பட்டு உள்ளது.

Tags :