Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்த ஆண்டு இஸ்லாமியர்கள் ஹஜ் புனிதப்பயணம் மேற்கொள்ள வாய்ப்பு இல்லை

இந்த ஆண்டு இஸ்லாமியர்கள் ஹஜ் புனிதப்பயணம் மேற்கொள்ள வாய்ப்பு இல்லை

By: Karunakaran Sun, 07 June 2020 2:46:05 PM

இந்த ஆண்டு இஸ்லாமியர்கள் ஹஜ் புனிதப்பயணம் மேற்கொள்ள வாய்ப்பு இல்லை

இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ஹஜ் புனிதப்பயணத்திற்கு ஆண்டுதோறும் இந்தியாவில் இருந்து ஏராளமானோர் பயணம் மேற்கொள்வர். இந்த ஆண்டு அடுத்த மாத இறுதியில் அல்லது ஆகஸ்டு மாத தொடக்கத்தில் ஹஜ் புனிதப்பயணத்திற்கு திட்டமிடப்பட்டிருந்தது.

இந்தியாவில் இருந்து சவுதி அரேபியாவில் உள்ள புனித தலங்களுக்கு ஹஜ் புனிதப்பயணம் செய்ய 2 லட்சம் பேர் திட்டமிட்டு, பலர் ஹஜ் கமிட்டியிடம் கட்டணம் செலுத்தியிருந்தனர். ஆனால் தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. சவுதி அரேபியாவில் 95 ஆயிரத்துக்கு அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

muslims,hajj pilgrimage,saudi arabia,maqsood ahmad khan ,இஸ்லாமியர்கள்,ஹஜ் புனிதப்பயணம்,சவுதி அரேபியா,மக்சூத் அகமது கான்

இந்நிலையில், ஹஜ் புனிதப்பயணத்தை இந்த ஆண்டு இந்தியாவில் இருந்து இஸ்லாமிய பெருமக்கள் மேற்கொள்வதற்கு வாய்ப்பு இல்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இதுகுறித்து இந்திய ஹஜ் கமிட்டியின் தலைமை செயல் அதிகாரி மக்சூத் அகமது கான் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹஜ் புனிதப்பயணத்துக்கான ஆயத்த பணிகள் குறித்து சவுதி அதிகாரிகள் எந்த மேலதிக தகவலையும் தெரிவிக்கவில்லை. ஹஜ் புனிதப்பயணம் மேற்கொள்வதில் நிலவி வருகிற நிச்சயமற்ற தன்மை குறித்து பல தரப்பினரும் விசாரித்துள்ளனர். இந்த ஆண்டு ஹஜ் புனிதப்பயணத்தை ரத்து செய்ய விரும்புவோருக்கு, இதுவரை செலுத்திய 100 சதவீத தொகையும் எந்த விதமான பிடித்தமும் இன்றி திருப்பித்தரப்படும் என்று தெரிவித்துள்ளார்.

சில நாடுகள் ஏற்கனவே இந்த புனிதப்பயணத்தை நடப்பு ஆண்டில் மேற்கொள்வதை ரத்து செய்துள்ளன. இந்தோனோசியாவிலும் இந்த ஆண்டு ஹஜ் புனிதப்பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :