Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • எதிரான நிலைப்பாட்டையே தொண்டமான் கொண்டிருந்தார்; அமைச்சர் தகவல்

எதிரான நிலைப்பாட்டையே தொண்டமான் கொண்டிருந்தார்; அமைச்சர் தகவல்

By: Nagaraj Fri, 11 Sept 2020 7:42:33 PM

எதிரான நிலைப்பாட்டையே தொண்டமான் கொண்டிருந்தார்; அமைச்சர் தகவல்

எதிரான நிலைப்பாடு... தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான நிலைப்பாட்டையே தொண்டமான் கொண்டிருந்தார் என அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவால் முன்வைக்கப்பட்ட அமரர் ஆறுமுகன் தொண்டமான் தொடர்பான அனுதாபப் பிரேரணை மீது உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘அவரது திடீர் மறைவு எமது நாட்டு மக்களுக்கு ஒரு துயரமான சம்பவம். அமரர் ஆறுமுகன் தொண்டமான் ஆளும், எதிர்க்கட்சி ஆசனங்களிலும் அமர்ந்திருக்கிறார். அவர் நாட்டின் அனைத்து இன, மத மக்களுக்கும் எந்தவிதமானப் பாரப்பட்சமின்றி சேவை செய்தவர்.

thondaman,services,can carry,converse ,தொண்டமான், சேவைகள், முன்னெடுக்க,  உரையாட முடியும்

தமிழீழ விடுதலைப் புலிகளிற்கு எதிரான ஸ்தீரமான நிலைபாட்டில் அவர் இருந்தார். பெருந்தோட்டத் தொழிலாளர்கள், நுவரெலியா மாவட்ட உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் அவர் சிறந்த சேவைகளை செய்திருந்தார். தமிழ், சிங்கள, ஆங்கில மொழியில் அவருக்கு சரளமாக உரையாட முடியும்.

தொண்டமானின் சேவைகளை தொடர்ந்து முன்னெடுக்க அவரது புதல்வரான இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் எங்களோடு இணைந்திருக்கிறார்“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

Tags :