Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இனி அந்த பதவிகள் இல்லை... காலாவதியாவிட்டது; முன்னாள் அமைச்சர் சொல்கிறார்

இனி அந்த பதவிகள் இல்லை... காலாவதியாவிட்டது; முன்னாள் அமைச்சர் சொல்கிறார்

By: Nagaraj Sat, 25 June 2022 03:22:47 AM

இனி அந்த பதவிகள் இல்லை... காலாவதியாவிட்டது; முன்னாள் அமைச்சர் சொல்கிறார்

சென்னை: அவ்வளவுதான் அந்த பதவிகள் இனி இல்லை... அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் பதவிகள் இல்லை என்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். அதிமுக பொதுக்குழு கூட்டத்திலிருந்து நேற்று வெளியேறிய துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், இது சட்டத்துக்குப் புறம்பான பொதுக்குழு என்று கோஷமிட்டார். அதோடு, ஜூலை 11ஆம் தேதி அறிவிக்கப்பட்ட பொதுக்குழு அறிவிப்பும் செல்லாது. பொதுக்குழு நடத்த ஒருங்கிணைப்பாளர் கையொப்பமும் தேவை என்று தெரிவித்தார். இந்நிலையில் வைத்திலிங்கம் கூறியது தொடர்பாக முன்னாள் அமைச்சர்களும், எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களுமான, சி.வி.சண்முகம், ஜெயக்குமார், எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர், பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்டோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். சி.வி.சண்முகம் பேசுகையில் ஓ.பன்னீர் செல்வத்தை முன்னாள் ஒருங்கிணைப்பாளர், வைத்திலிங்கத்தை முன்னாள் துணை ஒருங்கிணைப்பாளர் எனக் கூறி பேட்டி அளித்தார்.

no posts,coordinator,general committee,status,ex-minister ,பதவிகள் இல்லை, ஒருங்கிணைப்பாளர், பொதுக்குழு, நிலைமை, முன்னாள் அமைச்சர்

கட்சி விதி எண் 19ன் கீழ் பொதுக்குழுவுக்கு அதிகாரம் உண்டு என்று தெரிவித்த அவர், பொதுக்குழு உறுப்பினர்கள் 5ல் ஒரு பங்கினர் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தால் 30 நாட்களுக்குள் பொதுக்குழுக் கூட்ட வேண்டும். நேற்று நடைபெற்ற பொதுக்குழு முறையற்றது என்று கூறும் வைத்திலிங்கத்தின் கருத்து ஏற்புடையதல்ல. பொதுக்குழுவைக் கூட்ட எந்த ஆட்சேபனையும் இல்லை என ஓபிஎஸ் தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்தது. ஓபிஎஸ் கையெழுத்திட்டுக் கூட்டப்பட்ட பொதுக்குழுவை முறையற்றது என்கிறாரா என்று கேள்வி எழுப்பினார். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்கள் அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற சட்டத்திருத்தம் நேற்று வைக்கப்படாததால் தாமாகவே காலாவதி ஆகிவிட்டது. அதன்படி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்கள் பதவிகள் இனி இல்லை. ஓ.பன்னீர் செல்வம் அதிமுகவின் பொருளாளர், எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் தலைமை நிலையச் செயலாளர் அவ்வளவுதான். இதுதான் இன்றைக்கு நிலைமை” என்று கூறினார்.

Tags :
|