Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ரயில் விபத்துக்கு காரணமானவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவர் .. பிரதமர் மோடி

ரயில் விபத்துக்கு காரணமானவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவர் .. பிரதமர் மோடி

By: vaithegi Sun, 04 June 2023 2:05:23 PM

ரயில் விபத்துக்கு காரணமானவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவர்      ..  பிரதமர் மோடி

இந்தியா: ரயில் விபத்து நடந்த இடத்தை பார்வையிட நேற்று பிரதமர் மோடி ஒடிசா சென்றார். ரயில் விபத்து மீட்பு பணிகள் பற்றி ஆய்வு கூட்டத்தை நடத்தினார். விபத்து நடந்த இடத்தை பார்வையிட, பாலசோர் மாவட்டத்தில் உள்ள பகாநகா பஜார் நிலையத்துக்கு விமானப்படை ஹெலிகாப்டரில் சென்றார். விபத்து நடந்த இடத்தை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோருடன் பார்வையிட்டார்.

அதன்பின் பாலசோர் மாவட்ட மருத்துவமனைக்கு சென்று காயம் அடைந்த பயணிகளை சந்தித்து நலம் விசாரித்தார். அங்கிருந்து அமைச்சரவை செயலாளர், சுகாதாரத்துறை அமைச்சர் ஆகியோருடன் பேசினார். காயம் அடைந்தவர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் உறுதி செய்யும்படி பிரதமர் மோடி உத்தரவிட்டார்.

prime minister modi,minister of railways ,பிரதமர் மோடி, ரயில்வே அமைச்சர்

அதன்பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-ஒடிசா ரயில் விபத்து மிகவும் வேதனையான சம்பவம். இந்த சோக சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு மத்திய அரசு துணை நிற்கும். காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சைஅளிக்க அனைத்து உதவிகளையும் மத்திய அரச அளிக்கும்.

மேலும் இது மிக மோசமான விபத்து என்பதால், இது பற்றி அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்துக்கு காரணமானவர்கள், மிகவும் கடுமையாக தண்டிக்கப்படுவர் என அவர் கூறினார்.

Tags :