Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கூட்டுறவுத்துறை உதவியாளர் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யாதவர்களும் விண்ணப்பிக்கலாம்

கூட்டுறவுத்துறை உதவியாளர் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யாதவர்களும் விண்ணப்பிக்கலாம்

By: vaithegi Fri, 17 Nov 2023 3:30:02 PM

கூட்டுறவுத்துறை உதவியாளர் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யாதவர்களும் விண்ணப்பிக்கலாம்

சென்னை: தமிழகத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் கூட்டுறவுத் துறைகளில் தேர்வு செய்யப்பட்ட சுருக்கெழுத்து தட்டச்சர்கள் (நிலை 3) மற்றும் தட்டச்சு பணியிடங்களுக்காகப் பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு 32 பேருக்கு பணிநியமன ஆணையை வழங்கினார். இதையடுத்து அப்போது பேசிய அவர் படித்து முடித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் தர வேண்டும் என்றும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றும் முதல்வர் அறிவுறுத்தி இருப்பதாக தெரிவித்து உள்ளார்.

employment,co-operative assistant ,வேலைவாய்ப்பு ,கூட்டுறவுத்துறை உதவியாளர்

மேலும் பேசிய அவர் கூட்டுறவுத் துறையில் பணியாளர்களை தேர்வு செய்வற்கு என்றே தனிச்சட்டம் இருப்பதாகவும், அதன் அடிப்படையில் தான் பணி நியமனங்கள் ஒளிவுமறைவு இன்றி நடைபெறுவதாக அவர் தெரிவித்தார்.

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 70 லட்சம் பேர் பதிவு செய்திருந்தாலும், வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்யாதவர்களும் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். அதற்கு எந்த வித தடையும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags :