Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வந்தே பாரத் ரயில்கள் மீது கற்களை வீசி சேதம் விளைவிப்பவர்களுக்கு சிறை தண்டனை

வந்தே பாரத் ரயில்கள் மீது கற்களை வீசி சேதம் விளைவிப்பவர்களுக்கு சிறை தண்டனை

By: Nagaraj Wed, 29 Mar 2023 11:21:24 PM

வந்தே பாரத் ரயில்கள் மீது கற்களை வீசி சேதம் விளைவிப்பவர்களுக்கு சிறை தண்டனை

புதுடில்லி: வந்தே பாரத் ரயில்கள் மீது கற்களை வீசி சேதம் விளைவிப்பவர்களுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வந்தே பாரத் இந்தியாவின் வேகமான இன்டர்சிட்டி ரயில் ஆகும். இந்த ரயில்கள் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் சென்னை ஐசிஎஃப்-ல் தயாரிக்கப்பட்டது. ஜனவரி 27, 2019 அன்று, வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் (புது டெல்லி முதல் வாரணாசி வரை) சோதனை ஓட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

jail,train,vande bharath, ,5 ஆண்டுகள்,சிறை, வந்தே பாரத்

இந்நிலையில், வந்தே பாரத் ரயில்கள் மீது கற்களை வீசி சேதம் விளைவிப்பவர்களுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அவர் கூறியதாவது: சமீப காலமாக வந்தே பாரத் ரயில்கள் மீது கல் வீச்சு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த ஆண்டில் மட்டும் 9 சம்பவங்கள் நடைபெற்று இது தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், ரயில்கள் மீது கற்களை வீசி சேதம் விளைவிப்பவர்களுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் வந்தே பாரத் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Tags :
|
|