Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஏற்கனவே வேலை பார்த்தவர்கள் எச்1பி விசா மூலம் மீண்டும் அமெரிக்கா திரும்பி பணியாற்றலாம்

ஏற்கனவே வேலை பார்த்தவர்கள் எச்1பி விசா மூலம் மீண்டும் அமெரிக்கா திரும்பி பணியாற்றலாம்

By: Karunakaran Thu, 13 Aug 2020 12:11:22 PM

ஏற்கனவே வேலை பார்த்தவர்கள் எச்1பி விசா மூலம் மீண்டும் அமெரிக்கா திரும்பி பணியாற்றலாம்

கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் உள்ள வுகான் நகரில் முதன் முதலாக கொரோனா வைரஸ் தோன்றியது. தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நாடுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன.

இதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல்வேறு நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வந்தாலும், கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. கொரோனா தோன்றியது சீனாவாக இருந்தாலும் அதன் தாக்கம் மற்ற நாடுகளிலே அதிகமாக உள்ளது. உலகளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

united states,h1b visa,us state department,employees ,அமெரிக்கா, எச் 1 பி விசா, அமெரிக்க வெளியுறவுத்துறை, ஊழியர்கள்

கொரோனா பரவலை தடுக்க அமெரிக்கா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அதன்படி, அமெரிக்காவில் உள்ள வெளிநாட்டவர்கள் வெளியேறும் படி உத்தரவிடப்பட்டது. இதனால் அங்கு படிப்பிற்காக சென்ற மாணவர்கள், வேலைக்காக சென்ற வெளிநாட்டவர்கள் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஜூன் 22ல் எச்1பி விசாவுக்கு இந்தாண்டு இறுதிவரை தடை விதிக்கப்பட்ட நிலையில் அமெரிக்கா தளர்வு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில், ஏற்கனவே வேலை பார்த்தவர்கள் எச்1பி விசா மூலம் மீண்டும் அமெரிக்கா திரும்பி பணியாற்றலாம். ஏற்கனவே தாங்கள் வகித்த வேலையில் சேர்ந்து மீண்டும் பணியாற்றுவதாக இருந்தால் மட்டுமே அமெரிக்கா திரும்பலாம். எச்1பி விசா ஊழியர்கள் தங்களது மனைவி, பிள்ளைகளையும் அழைத்து வரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :