Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விளைவிப்பவர்களுக்கு அவர்கள் மொழியிலேயே பதிலடி கொடுக்கப்படும் - பிரதமர் மோடி

இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விளைவிப்பவர்களுக்கு அவர்கள் மொழியிலேயே பதிலடி கொடுக்கப்படும் - பிரதமர் மோடி

By: Karunakaran Sat, 15 Aug 2020 1:26:59 PM

இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விளைவிப்பவர்களுக்கு அவர்கள் மொழியிலேயே பதிலடி கொடுக்கப்படும் - பிரதமர் மோடி

இந்தியாவின் 74-வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த சுதந்திர தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி இன்று டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியேற்றினார். அதன்பின் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

பிரதமர் மோடி உரையாற்றியபோது, எல்லைக்கட்டுப்பாட்டு கோடு முதல் உண்மையான எல்லைக்கட்டுப்பாடு கோடு வரை நமது நாட்டின் இறையான்மைக்கு எதிராக பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு அவர்களது மொழியிலேயே நமது வீரர்கள் பதிலடி கொடுத்துள்ளதாக கூறினார்.

india,threat,prime minister modi,independance day ,இந்தியா, அச்சுறுத்தல், பிரதமர் மோடி, சுதந்திர நாள்

எங்களுக்கு இந்தியாவின் ஒருமைப்பாடுதான் முக்கியம். இதற்காக நமது வீரர்கள் என்ன செய்வார்கள் என்பதையும், நாடு என்ன செய்யும் என்பதையும் இந்த உலகம் லடாக்கில் பார்த்துள்ளது என கடந்த ஜூலை 15 ஆம் தேதி லடாக்கில் இந்திய-சீன வீரர்கள் இடையே ஏற்பட்ட மோதலை குறிப்பிட்டு பிரதமர் மோடி கூறினார்.

மேலும் அவர், ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தரமற்ற உறுப்பினராக தேர்வு செய்ய 192 நாடுகளில் 184 நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்தது உலக நாடுகள் இந்தியாவுடன் இருப்பதற்கான சான்று ஆகும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

Tags :
|
|