Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தைரியமாக பேசுபவர்கள் சிறையில் அடைக்கப்படுகின்றனர்; மல்லிகார்ஜூன கார்கே காட்டம்

தைரியமாக பேசுபவர்கள் சிறையில் அடைக்கப்படுகின்றனர்; மல்லிகார்ஜூன கார்கே காட்டம்

By: Nagaraj Mon, 13 Feb 2023 08:03:15 AM

தைரியமாக பேசுபவர்கள் சிறையில் அடைக்கப்படுகின்றனர்; மல்லிகார்ஜூன கார்கே காட்டம்

ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலம், சாஹிப்கஞ்ச் மாவட்டம், பாகூரில் உள்ள குமானி மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பேரணியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், “நாடு, நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் பேச்சு சுதந்திரம் இல்லை. மேலும், தைரியமாக பேசுபவர்கள் பின்னர் சிறையில் அடைக்கப்படுகின்றனர்.

பிரதமர் மோடி அரசு பணத்தை அதானிக்கு தொடர்ந்து வழங்கி வருகிறார். எல்ஐசி, எஸ்பிஐ மற்றும் அரசு வங்கிகளில் இருந்து அதானி ரூ.82,000 கோடி பெற்றுள்ளது. இந்த பிரச்னையை நாங்கள் பார்லிமென்டில் எழுப்பினால், எங்கள் பேச்சு பதிவில் இருந்து நீக்கப்படுகிறது.

bjp,freedomm,modi , காங்கிரஸ், கார்கே, யாத்திரை

பணவீக்கத்தை குறைப்பதாக வாக்குறுதி அளித்து 2014ல் பாஜக ஆட்சிக்கு வந்தது. அவர்கள் ஆட்சிக்கு வந்தது முதல் அத்தியாவசியப் பொருட்களின் விலையும், வறுமையும் அதிகரித்து வருகிறது. காங்கிரஸ் கட்சி நாட்டின் உள்கட்டமைப்பை அதிகரித்தது. சுதந்திரத்திற்காகப் போராடினார்.

முன்னதாக, கட்சியின் 60 நாள் “ஹட்சே ஹத் ஜோடோ” யாத்திரையை கார்கே தொடங்கி வைத்தார். இந்த யாத்திரையின் போது காங்கிரஸ் தொண்டர்கள் வீடு வீடாக சென்று மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை எடுத்துரைக்க உள்ளனர். இந்த பேரணியில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் அவினாஸ் பாண்டே, மாநில காங்கிரஸ் தலைவர் ராஜேஸ் தாகூர், மாநில அமைச்சர் அலம்கிர் ஆலம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags :
|