Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு பெற விரும்புவோர் இ-சேவை மையம் மூலம் விண்ணப்பித்தால் 15 நாட்களில் ரேஷன் கார்டு வழங்கப்படும்....மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு பெற விரும்புவோர் இ-சேவை மையம் மூலம் விண்ணப்பித்தால் 15 நாட்களில் ரேஷன் கார்டு வழங்கப்படும்....மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

By: vaithegi Thu, 16 June 2022 2:04:03 PM

தமிழகத்தில்  புதிய  ரேஷன் கார்டு பெற விரும்புவோர் இ-சேவை மையம் மூலம் விண்ணப்பித்தால் 15 நாட்களில் ரேஷன் கார்டு வழங்கப்படும்....மாவட்ட ஆட்சியர்  அறிவிப்பு

தமிழகம் : தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் ரேஷன் கார்டுகள் மூலம் ரேஷன் கடைகளில் மலிவு விலையில் மளிகை மற்றும் வீட்டு உபயோக பொருட்களை அரசு வழங்கி வருகிறது. கடந்த ஊரடங்கு மாதங்களில் அனைத்து மாநில அரசுகளும் ரேஷன் கடைகள் மூலம் நிவாரணங்களை பெற்று மக்கள் பயனடைந்தனர்.

இந்த அட்டை குடும்ப தலைவரின் வருமானத்தை பொறுத்து ரேஷன் தரநிலை 5 வகைகளாகப் பிரிக்கப்பட்டு வழங்கபடுகிறது. இந்தியா முழுவதும் வேலைக்காக இடம்பெயரும் பெரும்பாலான தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் இந்தியாவில் "ஒரே நாடு – ஒரே ரேஷன் கார்டு" திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது

இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த வருடம் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்றும் வாக்குறுதி அளித்தார். இந்த வாக்குறுதியை அடுத்து தமிழகத்தில் புதிதாக ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துள்ளது.

e-service center,ration card,aadhar no. ,இ-சேவை மையம் ,ரேஷன் கார்டு,ஆதார் எண்

தற்போது இ-சேவை மையம் மூலம் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கும் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் விண்ணப்பித்தால் 15 நாட்களில் குடும்ப அட்டை வழங்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து தர்மபுரி மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பை வெளியிட்டுள்ளார்.

அதில் அரசு இ-சேவை மையங்களிலேயே உரிய ஆவணங்களுடன் புதிய குடும்ப அட்டைகள் (Smart Cards) வேண்டி இணையதளத்தில் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டு கட்டணம் ரூ.60 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், தொலைபேசி எண் மாற்றம், ஆதார் எண் சேர்த்தல் போன்ற பணிகளுக்கு இணையத்தில் செய்யப்படுகிறது. இதற்கு கட்டணமாக ரூ.30 வசூலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பது தொடர்பான சந்தேகங்களுக்கு மக்கள் தங்கள் வட்டத்திற்கு உட்பட்ட வட்ட வழங்கல் அலுவலரை தொடர்பு கொள்ளலாம் எனவும் கூறிள்ளார்.

Tags :