Advertisement

ப்ளூ டிக் சந்தாவை ரத்து செய்த ஆயிரக்கணக்கான பயனர்கள்

By: Nagaraj Sun, 07 May 2023 12:31:13 PM

ப்ளூ டிக் சந்தாவை ரத்து செய்த ஆயிரக்கணக்கான பயனர்கள்

நியூயார்க்: ப்ளூ டிக் சந்தாவை ரத்து செய்தனர்... ட்விட்டர் நிறுவனத்தின் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளால் ட்விட்டர் பயனர்கள் மற்றும் பாதிக்கும் மேற்பட்ட ட்விட்டர் சந்தாதாரர்கள் தங்கள் ப்ளூ டிக் சந்தாவை ரத்து செய்துள்ளனர்.

இதற்கு முன்பாக ஊடக நிறுவனங்கள், சமூக வலைதள இன்ப்ளுயன்ஸர்கள், பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் போன்ற பயனர் கணக்குகளுக்கு மட்டுமே ப்ளூ டிக் வழங்கி வந்தது ட்விட்டர். இவர்கள் அனைவரும் சந்தா கட்டணம் செலுத்தாமல் இந்த அம்சத்தை பெற்று வந்தனர். இந்த சூழலில் ப்ளூ டிக் சந்தாவை மேற்கூறிய இந்த அங்கீகரிக்கப்பட்ட பிரபலங்களும் செலுத்த வேண்டிய சூழல் உருவாகி உள்ளது.

ட்விட்டர் பயனாளர்களின் வெரிஃபைடு கணக்குகளுக்கு வழங்கப்படும் ப்ளூ டிக்கை தொடர்ந்து பெற இனி கட்டணம் வசூலிக்கப்படும் என்று எலான் மஸ்க் கூறியிருந்தார். கட்டணம் செலுத்தாத பயனர்களின் அந்த ப்ளூ டிக் குறியீடு அகற்றப்படும் என்று ஏற்கனவே கூறியிருந்தார். ஆரம்பத்தில் ட்விட்டரில் 1,50,000 ப்ளூ டிக் சந்தாதாரர்கள் இருந்தனர், ஆனால் இப்போது 68, 157 ப்ளூ டிக் சந்தாதாரர்கள் மட்டுமே உள்ளனர்.

உலக பணக்காரர்களில் ஒருவரும், டெஸ்லா நிறுவனத்தின் தலைவருமான எலான் மஸ்க், கடந்த அக்டோபர் மாதம் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கினார்.

blue tick,subscription,cancel,users,struggling,problems ,ப்ளூ டிக், சந்தா, ரத்து, பயனர்கள், போராடி வருகிறது, சிக்கல்கள்

இதனை தொடர்ந்து ட்விட்டர் நிறுவனத்தில் ப்ளு டிக், ஆட்குறைப்பு, என்று பல்வேறு அதிரடிகளை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் தற்பொழுது பயனர்களின் பழைய ப்ளூ டிக்-க்குகளை நீக்க ட்விட்டர் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

ட்விட்டர் அறிக்கையின்படி, பாதிக்கும் மேற்பட்ட ட்விட்டர் சந்தாதாரர்கள் தங்கள் சந்தாவை ரத்து செய்துள்ளனர். ட்விட்டரில் ஆரம்பத்தில் 1,50,000 ப்ளூ டிக் சந்தாதாரர்கள் இருந்தனர், ஆனால் இப்போது ஏப்ரல் 30 ஆம் தேதி வரை 68, 157 ப்ளூ டிக் சந்தாதாரர்கள் மட்டுமே உள்ளனர். அதாவது 80,000க்கும் அதிகமான பயனர்கள் தங்கள் சந்தாவை ரத்து செய்துள்ளனர்.

ட்விட்டர் ப்ளூ சந்தாதாரர்களை ஈர்க்கவும் தக்க வைக்கவும் போராடி வருகிறது. ட்விட்டர் ப்ளூ டிக்கை பயனர்களுக்கு வெற்றிகரமான சந்தா சேவையாக மாற்ற விரும்பினால், ட்விட்டர் பல அடிப்படை சிக்கல்களைத் தீர்க்க வேண்டும் என் இணையவாசிகள் தெரிவித்துள்ளனர்.

Tags :
|
|